அது முடிக்கவும் முடிக்காது
ஜெயா மரணம் பற்றி விசாரிக்கும் ஆறுமுக சாமி கமிஷன் இன்னும் விசாரணை முடிக்கவில்லை அது முடிக்கவும் முடிக்காது
இந்தியாவில் எந்த விசரனை கமிஷன் முடிவும் வெளிவராது என்பதற்கு ஆறுமுக சாமி கமிஷனும் விதி விலக்கு அல்ல,
ஒரு விஷயம் புரிகின்றது
ஜெயா இருந்தால் தனக்கு இந்த இடம் கிடைத்திருக்காது என தமிழக ஆளும் தரப்பு, அவர் இருந்திருந்தால் இப்படி மாநில அரசை ஆட்டிவைக்க முடியாது என மத்திய தரப்பு , இன்னும் எதிர்க்கட்சி எல்லாமே மகிழ்வோடு இருக்கின்றது.
ஜெயா இல்லாதது அவர்களுக்கு ஏக மகிழ்ச்சி.
ஆக ஜெயா சாவில் மர்மம் இருந்தால் இருக்கட்டும் சந்தேகத்துக்குரியர்கள்நமக்கு மாபெரும் நன்மை செய்திருக்கினார்கள் , அவர்களுக்கு இந்த நன்றி கடன் கூட செய்யவே விட்டால் எப்படி என்கிற அளவில் எல்லோரும் அமைதி காக்கின்றார்கள்.
பாவம் ஜெயலலிதா, அவரின் வாழ்வில் எல்லாமே மர்மம் அவர் சாவும் மர்மம்.