அதென்ன மேசானிக் சம்பளம்?
அதென்ன மேசானிக் சம்பளம்? புத்தா குரூப் என்றால் என்ன?
அந்த கோஷ்டியில் பூராவும் இப்படிபட்ட ஆட்களாகத்தான் இருப்பார்கள் போல, இந்த காலத்திலே இப்படி பைத்தியமாய் இருக்கும் கோஷ்டி 1950களில் எப்படி இருந்திருக்கும்?
வேறு ஏன் ராம்சாமி தலைவனாகமாட்டார் , அண்ணாதுரை பெரும் அறிஞனாக மாட்டார்?
தமிழிசை தலைவராய் இருந்து கவர்ணரானதில் தவறே இல்லை, இந்த கோஷ்டி இப்படித்தான் போலிருக்கின்றது
தாமரை எந்த யூரியா, பொட்டாசியம் , காம்ளக்ஸ் உரம் போட்டாலும் , ஆர்கானிக் உரம் போட்டாலும் இந்த மாதிரி கோஷ்டி இருக்கும் வரை மலரவே மலராது
4 பேரும் 3 வோட்டும் இல்லாத நிலையிலே இவ்வளவு அலம்பு என்றால் , வலுவான கட்சியாக மாறினால் என்ன ஆட்டம் இருக்கும்?
டெப்பாசிட் போகும் நிலையிலே, அட தொகுதிக்கு வேட்பாளர் கிடைக்கா நிலையிலே இவ்வளவு இறுமாப்பு..
ஆட்டுக்கு வாலையும் இவர்களுக்கு ஏன் ஆட்களையும் ஆண்டவன் குறைதுவைத்தான் என்பது இப்பொழுதுதான் புரிகின்றது
காலம் வரைக்கும் இப்படி டெப்பாசிட் இழந்துட்டே இருங்கடா டேய்..
