அதெல்லாம் ஆண்டவன் கொடுக்கும் வரம்
இசை என்பது பிராமணரின் அடையாளம் என்பது கச்சேரி மேடை தாண்டி சினிமா வரை இருந்தது
அது எங்கள் குல சொத்து என கொண்டாடியதை முதலில் உடைத்து போட்டவர் இளையராஜா
அவரையும் முதலில் விட்டார்களா?
இது இசையே இல்லை, சாவுக்குத்து மேளம் என்றெல்லாம் விரட்டினார்கள். ஆனால் நின்று சாதித்தார் இளையராஜா
(ஆனால் உண்மையான காட்டு அடியினை கொடுக்கும் அனிருத் என்பவர் மேல் சர்ச்சை வராது, காரணம் அவாள் எல்லாம் வேறு வகை)
இளையராஜாவின் வரவுக்கு பின்பு பிராமணர் அல்லா பாடகர் பாடகிகளும் நிறைய வந்தனர்
அதன் பின் ரகுமான் அந்த இடத்தை பிடித்தார் என்பது வேறுவிஷயம்.
நாம் சொல்ல வரும் விஷயம் இதுதான்
இசை எம் குல சொத்து என அந்த இனம் சொல்லிகொண்டுதான் இருக்கும், எல்லாம் எதுவரை என்றால் இன்னொருவன் எமக்கும் இசை வரும் என நிரூபித்து காட்டும் வரை…
மற்றையவன் தன்னை நிரூபித்துவிட்டால் கம்மென்று அமர்ந்து பின் காலிலும் விழுவார்கள்
அப்படி சுதா ரகுநாதனின் பேரபிள்ளைகளுக்கும் ஒரு காலம் வரும்
கெஞ்சினால் மிஞ்சுவதும் மிஞ்சினால் கெஞ்சுவதும் அவர்கள் குணம்
இசை என்பது கடவுளின் வரம், அவரால் அவர் விரும்பியவருக்கு நிரம்ப கொடுக்கபடும்
ரகுமான் முதல் மைக்கேல் ஜாக்சன் வரை அந்த திருவையாறு மும்மூர்த்திகளை வணங்கிவிட்டா சாதித்தார்கள்?
அதெல்லாம் ஆண்டவன் கொடுக்கும் வரம்
ஒரு சாதிக்குள் அடைப்பது என்பது முட்டாள் தனம், மும்மூர்த்திகள் கிழித்தார்கள் என்பது அதைவிட மடத்தனம்