அதை எம்மிடம் எதிர்பார்க்காதீர்கள்

இப்பக்கம் அரசியல் , விளையாட்டு, சினிமா, இலக்கியம், விஞ்ஞானம், வரலாறு , நடப்பு செய்தி என எல்லாமும் போர்ஸ்ட் மார்டம் செய்யப்படும்

ஒரு கட்சி , ஒரு தலைவன் அபிமானம் அப்படியெல்லாம் ஏதுமில்லை தலைவி குஷ்புவினை தவிர‌

பிடித்தவர்கள் வரலாம், இல்லையெனில் நடையினை கட்டலாம்

மாறாக சங்கி, பாஜக அடிவருடி இன்னும் நயினாரிடம் பணம் வாங்கியவன் என சொல்பவன் எல்லாம் கிளம்பவும்

உங்களுக்காகவும் நயினாருக்காவும் பாஜகவுக்காகவும் ஒரு பயலும் எழுதவில்லை,அது அவசியமுமில்லை

நாம் எல்லாவற்றையும் எழுதுகின்றோம், அதை எல்லாம் விட்டுவிட்டு சில விஷயங்களுக்காக குதியோ குதி என குதிப்பது

திமுக என்ன உலகின் அதி முக்கிய இயக்கமா? இல்லை உலகினை கட்டுபடுத்தும் அதிசக்தியா?

இல்லை உலகிற்கே வழிகாட்டிய இயக்கமா?

பாலஸ்தீன ஹமாசுக்கோ இல்லை வேறு இயக்கங்களுக்கோ இருக்கும் பெயரில் 0.0001 கூட திமுகவுக்கு இல்லை

காஸ்ட்ரோ, கமால் பாட்சா போன்ற பெரும் அடையாளங்களை போல திமுக யாரை கொடுத்தது? அல்லது கொடுத்துவிட போகின்றது.

உலகின் தன்மை வேறு, இயங்கும் முறை வேறு உங்கள் கனவுகளும் உலகமும் வேறு

அதை எம்மிடம் எதிர்பார்க்காதீர்கள்

உங்களை போல 200 ரூபாய்க்கு எழுதும் ரகம் அல்ல நாம், புரியாத இம்சைகள் உடனே கிளம்புங்கள்

இல்லையேல் பிடித்து வெளியே தள்ளபடுவீர்கள்