அத்திவரதரை தரிசித்தார் ரஜினிகாந்த்
அத்திவரதரை தரிசித்தார் ரஜினிகாந்த்
ரஜினியிடம் பல குழப்பங்கள் இருக்கலாம், ஆனால் அவரிடம் கற்க வேண்டிய விஷயம் அந்த பக்தி
தெய்வம் ஒன்றே தன்னை இந்த அளவு உயர்த்தியதாகவும், எந்நாளும் அது தன்னை நடத்துவதாகவும் மனமார நம்புகின்றார்
மிக பெரும் நடிகனாயினும், செல்வம் செல்வாக்கில் புரள்பராயினும், நினைத்தால் நொடியில் அரசுகளை காலடியில் வைக்கும் சக்தி இருந்தும் கடவுளின் சக்தியே பிரதானம் என அதன் முன் மிக எளிமையாய் கைகூப்பி நிற்கின்றார்
கடவுளை வணங்கவரும் பொழுது கொஞ்சமும் ஆணவமில்லை, அலங்காரமுமில்லை
நடிக்க தெரியா நடிகன் இருந்தாலும், அலங்காரமில்லா நடிகன் என எவனுமில்லை ரஜினி ஒருவரை தவிர
சினிமா உலகில் அது அபூர்வம், அந்த அபூர்வமானவர் ரஜினி
இதோ நீ படைத்த கோலம், இக்கோலமே என்னை வாழ்வாங்கு வாழவைத்தது என தன் சுயமான கோலத்தை கொஞ்சமும் மறைக்காமல் சென்று வணங்கி நிற்கும் அந்த பாங்கு வாழ்த்தகூடியது
அந்த கபடமில்லா பக்தியே அவரை வளர்த்தது, அதுவே அவரை எல்லா இக்கட்டிலிருந்தும் காத்தது
இன்னும் மாபெரும் உயரங்களை அது அவருக்கு கொடுக்கும்