அத்துமீறி ஆடினால் அதன் பின் பார்த்துகொள்ளலாம்

பாகிஸ்தான் தன் மக்களிடம் பகிரங்கமாக எல்லையில் சண்டைக்கு சென்றுவிட்டோம் இனி டெல்லிக்கு பாடம் புகட்டாமல் விடமாட்டோம் என சொல்ல தொடங்கிவிட்டது

கடுமையான வார்த்தைகளை பேச ஆரம்பித்துவிட்டார்கள்

இந்தியா அதுபற்றி கொஞ்சமும் அலட்டவில்லை, இதெல்லாம் அனுதினமும் நடப்பதுதான், எவ்வளவு பாடம் சொல்லிகொடுத்தாலும் அவர்கள் மரமண்டைக்கு ஏறவே இல்லை என அதன் போக்கில் இருக்கின்றது

கொஞ்சம் பதற்றமான நேரம் தொடங்கியிருப்பது போல் தெரிகின்றது

தீவிரவாதிகளை ஊடுருவ செய்ய முடியவில்லை இன்னும் பல விரக்தியில் மனநலம் குழம்பி திரிகின்றது அந்தநாடு

ஒருவனின் தொழில் மேல் கைவைத்தால் அவன் கொஞ்சம் ஆடத்தான் செய்வான், ஆடட்டும்

அத்துமீறி ஆடினால் அதன் பின் பார்த்துகொள்ளலாம்