அந்தணன் சண்முகம் : பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அதே நேரம் உண்மையினையும் எழுதுவது ஒரு கலை, அந்த கலையினை நிரம்ப பெற்றிருப்பவர் Anthanan Shanmugam அவர்கள்
பத்திரிகையாளர், சினிமா தயாரிப்பாளர் எல்லாவற்றிற்கும் மேல் தமிழ்கத்தில் விரல்விட்டு எண்ணகூடிய ரசனை மிகுந்த எழுத்தாளரில் ஒருவர்
அவருக்கு இன்று பிறந்தநாளாம், வாழ்த்துவோம்
நிச்சயமாக அவர் திரையுலக அந்தணன். அந்த அளவு திரையுலகின் எல்லா விதிகளும், ஆகமங்களும் அவருக்கு அத்துபடி.
அரசியலில் துக்ளக் பத்திரிகை போல , சினிமா செய்திகளுக்கு அவரின் தளம் என்பதுதான் மகா பொருத்தமானது. அந்த அளவு எல்லா நடிகர் நடிகையரும் அவரிடம் சிக்கி படும்பாடு அப்படி.
அதே நேரம் நல்ல படங்களை அடையாளம் காட்டவும் அவரின் பத்திரிகை தவறுவதில்லை;
அவரின் பத்திரிகையில் நமது குஷ்பூ தொடருக்கும் ஓரிடம் கொடுத்த பெரும் மனது அவருடையது. அந்த நல்ல மனதிற்காகவே அவர் பல்லாண்டு காலம் எல்லா நலமும் பெற்று வாழட்டும்.
திரையுலகில் குஷ்பூ பெற்ற தனியிடம் போலவே, நண்பரும் தனி இடம் பிடித்து ஆளட்டும்
இனிவரும் காலமெல்லாம் அவருக்கு எல்லா வளங்களும் கொண்டு வருவதாக அமையட்டும்..