அந்தமானில் கருணாநிதிக்கு சிலை திறந்து வைக்கின்றார் ஸ்டாலின் : செய்தி
அந்தமானில் கருணாநிதிக்கு சிலை திறந்து வைக்கின்றார் ஸ்டாலின் : செய்தி
ஆக அந்தமான் எனும் காட்டுவாசிகள் நிலத்திலும் பல்லாயிரம் ஆண்டுகளாக பிராமண ஆதிக்கம் இருந்திருக்கின்றது, நாகத்திலும் கொடிய பார்ப்பனர்கள் பன்னெடுங்காலமாக அந்த காட்டுவாசிகளை சூத்திரர்களாக நடத்தி சுகபோக வாழ்க்கை நடத்தியிருகின்றனர்
அங்கிருக்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஆலயங்களில் அம்மக்கள் நுழைய மறுக்கபட்டனர்
கருணாநிதிதான் தன் திராவிட புரட்சியில் அந்தமான் மக்களுக்கு விடுதலை கொடுத்து சமூக இழிவினை போக்கினார்
கருணாநிதியின் இன உணர்வு மற்றும் பெரியார் அண்ணாவுடன் சேர்ந்து நடுகடலில் அவர் நடத்திய கப்பல் மறியல் போராட்டம், படகில் தலைவைத்து போராட்டம் போன்றவற்றை மறைக்க ஆரிய பார்ப்பான் வெள்ளைக்காரன் உதவியுடன் கட்டியதுதான் அந்தமான் சிறை
அச்சிறையில் கருணாநிதியினை அடைத்து அங்கேயே கொல்ல திட்டமிட்ட பார்ப்பன ஆரியர்களின் கண்களில் மண்ணை தூவிவிடுத்தான் திராவிட கடலை தாண்டி திராவிட தமிழகத்தில் புரட்சி செய்தனர் திராவிட சிங்கங்கள்
ஆக அந்த பார்பண கொடுமையினை எதிர்த்து கருணாநிதி அந்தமானில் நிகழ்த்திய வீர போராட்டத்தை நினைவு கூற சிலை திறக்கபட்டுள்ளது
பெரியாரும் கருணாநிதியும் இல்லாவிட்டால் தமிழர்கள் எப்படி இருப்பார்கள், அவர்களை பார்ப்பான் எப்படி ஆக்கி வைத்திருப்பான் என்பதற்காக சென்டில் தீவு மக்களை திராவிட கழகம் அப்படியே விட்டு வைத்திருக்கின்றது
“ஏ தமிழனே திராவிட கொள்கையும் பெரியாரும் கருணாநிதியும் இல்லையென்றால் நீ இப்பொழுது சென்டில் இன மக்களை போலத்தான் காட்டுமிராண்டியாய் இருப்பாய்..”