அந்த செய்தி மிக சுவாரஸ்யமானது
அந்த செய்தி மிக சுவாரஸ்யமானது
மருத்துவ சிகிச்சையால் கணவன் நலம்பெறாமல் போகவும் மனமுடைந்த பெண்மணி ஒரு மாந்ரீகனை நாடியிருக்கின்றாள்
அவனும் வழக்கம் போல உன் நடு வீட்டுக்குள் தகடு புதைக்கபட்டுள்ளது, பணம் கொடுத்தால் பூஜை செய்ய நான் ரெடி ஆனால் தகட்டை நீதான் தோண்ட வேண்டும் என சொல்லிவிட்டான்
பெரும் தொகையினை வாங்கிவிட்டு அவனும் சுருட்டை குடித்தபடி கிளம்பிவிட்டான்
இந்த அப்பாவி பெண் அவன் சொன்னபடி நடுவீட்டில் தோண்டியிருக்கின்றாள்
அதுவும் தகடு தகடு என காக்கிசட்டை சத்யராஜ் போல சொல்லியபடியே தேடியிருக்கின்றாள்
தோண்ட தோண்ட மணல் வந்திருக்கின்றதே அன்றி தகடு வரவில்லை, அவள் தோண்டிய மணலை சாக்கு பைகளில் கட்டி வீட்டுக்குவெளியே வைத்திருகின்றாள் அதன் எண்ணிக்கை 70ஐ தாண்டியிருகின்றது
அவள் தோண்டிய ஆழம் 25 அடியினை தாண்டியிருக்கின்றது
மணல் மூட்டை மூட்டையாய் வீட்டுக்கு வெளியே அடுக்கபடுவதை பார்த்த எவனோ ஒருவனுக்கு பெரும் சிந்தனை வந்திருக்கின்றது, தமிழன் என்றால் அப்படித்தான்
இந்த வீட்டில் புதையலோ இல்லை ஏதோ கனிமமோ கிடைத்திருக்கின்றது என அவனின் புலனாய்வு மூளை சொல்லை, உடனே கனிமவளத்துறைக்கே தகவல் கொடுத்திருக்கின்றான்
அவர்களும் ஓடிவந்து விசாரித்ததில் உண்மை வெளிபட்டிருக்கின்றது
விஷயம் நடந்து 3 நாட்களாகிவிட்டன, வெளிநாட்டு பத்திரிகையில் கூட வந்துவிட்டது. தமிழக பத்திரிகைகளில் இன்றுதான் வந்திருக்கின்றது
அந்த அம்மணி 25 அடி ஆழம் வரை தோண்டியும் தகடு இல்லை, இருந்தால்தானே கிடைக்கும், தகடும் கிடைக்கவில்லை அந்த தகிடுதித்தோம் மந்திரவாதியும் கிடைக்கவில்லை
ஆயினும் தனியொருத்தியாக 25 அடி ஆழம் வரை ஒரு பெண் தோண்டியிருப்பது ஆச்சரியமே
இன்னும் 50 அடி தோண்டியிருந்தால் தண்ணீர் வந்திருக்கும், நடுவீட்டில் தண்ணீர் என்றால் எவ்வளவு வசதியாக இருந்திருக்கும்? அதை பக்கத்துவீட்டுக்காரன் கெடுத்துவிட்டான்
இனி அம்மணி என்ன செய்யலாம்?
தெருவில் யாரிடம் சொன்னால் ரகசியம் தங்காதோ, அவள் காதை பிடித்து இழுத்து , “நான் கனிமவளதுறையிடம் இருந்து தப்பவே மந்திரம், தகடு என பொய் சொன்னேன், எங்கள் வீட்டில் 30 அடியில் வைரம் உண்டு, இன்னும் சில அபூர்வ கல்லும் கனிமமும் உண்டு..” என சொன்னால் போதும்
பூரா வீடுகளும் அந்த ஏரியாவில் நள்ளிரவில் தோண்டபடும் அவை 100 அடிக்கும் கீழேசெல்லலாம், தூங்காமல் தோண்டுவார்கள்
ரசித்து ரசித்து பழிவாங்கலாம்..