அந்த தமிழனை நினைக்காமல் இருக்க முடியாது
காஷ்மீருக்கு அந்த 370 சட்டம் எப்படி வந்தது என்பதில் ஒரு தமிழருக்கும் பெரும் பங்கு உண்டு
அவர் பெயர் கோபாலசாமி ஐயங்கார், தஞ்சாவூர் தமிழர்
1882ல் பிறந்தவர், பெரும் படிப்பாளி
தஞ்சை சென்னை எனபடித்தவர், பச்சையப்பாவில் பட்டம் பெற்றார் அதன் பின் சட்டம் படித்தார், பச்சையப்பாவில் பேராசியராக பணியாற்றினார்
பின்பு அரசுபணி குறிப்பாக குடியுரிமை பணிகளில் கல்கத்தா டெல்லி என சுற்றியவருக்கு காஷ்மீர் மன்னனின் காரியதரிசியாகும் வாய்ப்பு கிடைத்தது
மன்னர் ஹரிசிங் அவரை காஷ்மீர் பிரதமராக நியமித்திருந்தார் கிட்டதட்ட திவான் பதவி
காஷ்மீரை 1937 முதல் 1947 வரை காஷ்மீரினை மன்னரின் ஆண்டது இந்த தமிழனே
1947ல் இந்திய தலையீடு வந்தபொழுது கோபாலசாமி அய்யங்காரே முழு வேலையினையும் செய்தார், பாகிஸ்தான் காஷ்மீரை சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருக்கின்றது என ஐநாவில் முழங்கியதும் அவரே
பாகிஸ்தான் அது உள்நாட்டு மக்களின் புரட்சி என சொன்னபொழுது அவர்கள் கைகளில் பாகிஸ்தானிய ஆயுதங்கள் வந்தது எப்படிஎன கோபாலசாமி கேட்டபொழுது பாகிஸ்தானிய பிரதிநிதியிடம் பதில் இல்லை
காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் அந்த 370 சட்டபிரிவினை கவனமாக உருவாக்கியது அந்த கோபாலசாமி எனும் தமிழன்
முதலில் அது பலத்த சர்ச்சையானது, ஒரு கட்டத்தில் முடியாத விஷயமுமானது
ஆனால் தன் சாதுர்யத்தால் அதனை சாதித்தார் கோபலசாமி அய்யங்கார், இந்திய காஷ்மீரிய இணைப்பு வரலாற்றில் மறக்க முடியாத நபர் அவர்
காஷ்மீரை காக்கவே இந்தியா வந்ததுஎன்பதும் இந்தியாவால் மட்டுமே காஷ்மீரை காத்து முன்னேற்ற முடியும் என்பதும் அவரின் நம்பிக்கை
சுதந்திர இந்தியாவில் காஷ்மீர் சம்பந்தமான அனைத்து நடவடிக்கைகளும் அவர் காலம் வரை அவரை கலந்து ஆலோசித்தே செய்யபட்டது
இந்தியாவுடன் இணைந்துவிட்டபின் அது இந்தியாவின் ஒரு பகுதியே என்பதில் உறுதியாக இருந்தார் கோபாலசாமி
அவரின் மகனே பத்திரிகையாளரும் ஐ.நா பிரதிநிதியுமான ஜி. பார்த்தசாரதி
காஷ்மீர் விவகாரம் பரபரப்பாக விவாதிக்கபடும் நிலையில் அந்த மாநிலத்துக்கே பிரதமராக இருந்த அந்த தமிழனை நினைக்காமல் இருக்க முடியாது