அந்த துறை இங்கு தேவையே இல்லாத பூட்டு
கோவில் நிலங்கள் தொடர்ப்பான சட்ட சர்ச்சை வர ஆரம்பித்திருக்கின்றது
அறநிலைய துறையினை ஒழித்து இந்து ஆலயங்களை ஊர் மக்களிடமே ஒப்படைக்கும் கட்சிக்கே வோட்டு என இந்துக்கள் கிளம்பினால் தவிர இந்த சிக்கலுக்கு தீர்வு இல்லை
இங்கு ஆலயங்களை அறநிலைய துறை கட்டவில்லை, அவை வாழ்வாங்கு வாழ்ந்த காலத்தில் அப்படி ஒரு துறையே இல்லை
பன்னெடுங்காலமாக ஆலயங்கள் உற்சாகமாக இயங்கி வந்த நிலையில் அவற்றுக்கு போடபட்ட ஒருவகை விலங்கே இந்த அறநிலையதுறை,
இதனால் ஆலயங்கள் இழந்ததே அதிகம் தவிர பெற்றது என எதுவுமில்லை
அந்த துறை இங்கு தேவையே இல்லாத பூட்டு, அதை உடைத்தொழிக்காதவரை இங்கு எதுவும் மாறபோவதில்லை