அந்த பெருமகனுக்கு கண்டிப்பாய் ஒரு சிலை நிறுவபட வேண்டும்
அந்த மனிதன் ஆசை ஆசையாக வள்ளுவர் கோட்டத்தை கட்டினான் அதன் திறப்புவிழாவில் கூட அவனை அழைக்காமல் அவமானபடுத்தினார்கள்
பூம்புகார் அமைத்துவிட்டு ராஜராஜசோழனுக்கு சிலை வடித்தான், அதையும் கோவிலுக்குள் வைக்கவிடாமல் விரட்டினார்கள்
அவன் வாழ்நாளெல்லாம் அவன் கனவுகளையும் அதனால் எழுந்த கட்டங்களையும் பாழ்படுத்தி அவனை மனதார அடிப்பதில் அவர்களுக்கு அவ்வளவு சந்தோஷம்
அவனோ அதை கடந்து அடுத்த விஷயத்திற்கு சென்றுவிடுவான், அவர்களும் விடாமல் வந்து வம்பிழுப்பார்கள்
அந்த அற்புத மனிதனின் 50 ஆண்டுகால வரலாறு சொல்லும் பாடம் அது
கடைசியிலும் அந்த புதிய சட்டமன்ற கட்டடத்தை பார்த்து பார்த்து ரசித்து ரசித்து கட்டினான்
இன்னும் 300 வருடம் அது தாங்கும் அளவு நுணுக்கமாக கட்டினான்
ஆனால் அதையும் பயன்படுத்தாமல் அவனை நோகவைத்து கொன்றார்கள்
அந்த மனிதனுக்கு ஏதும் மகத்தான அஞ்சலி என்றால் சட்டமன்றம் அந்த புதிய கட்டடத்துக்கு குடிபெயர்தலே ஆகும்
ஆனால் இந்த அரசு அங்கு செல்லாமலே இருப்பதுதான் அவருக்கான மரியாதை
காலங்கள் மாறும்பொழுது காட்சிகள் மாறும், அப்பொழுது அந்த புதிய சட்டமன்ற வாசலில் அந்த பெருமகனுக்கு கண்டிப்பாய் ஒரு சிலை நிறுவபட வேண்டும்
வாழ்நாளெல்லாம் அவனை கொத்தி கொத்தி விரட்டினார்கள் அல்லவா? அந்த காயத்துக்கான மருந்து அதுதான், பரிகாரமும் அதுதான்