அந்த முகபாவனை, அது மகா சிரமமானது
இலங்கை கிரிக்கெட் ஆட்டக்காரர் , தமிழர் முத்தையா முரளீதரனின் வாழ்வு படமாக்கபடுகின்றதாம் இதில் விஜய் சேதுபதி முரளீதரனாக நடிக்கின்றார்
நிச்சயம் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனையினை படைத்தவர் முரளீதரன். அச்சாதனைகளை இன்னொரு பந்துவீச்சாளர் பாதி நெருங்கினாலே பெரும் விஷயம்
பல ஆண்டுகளுக்கு அதை நெருங்கபோவது யாருமில்லை
தோட்ட தொழிலாளி மகனாக பிறந்து தன் மகா அற்புதமான பந்துவீச்சால் உலக பிரசித்தி பெற்று ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னை எல்லாம் தூக்கி எறிந்து உலக கோப்பையினை பெற்று கொடுத்தது சாதாரணம் அல்ல
அவர் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கலாம், தெத்துபல் தெரிய சிரிக்கலாம், பந்து வீசலாம் இன்னும் பல பாவனைகளை அவரை போலவே செய்யலாம்
ஆனால் ஒரு விஷயம் மகா சிக்கலானது
முரளிதரன் பந்துவீசும் அந்த முகபாவனை, அது மகா சிரமமானது
பந்தை கையில் எடுக்கும் பொழுது சிரிக்கும் முரளி பந்து வீச்சு கிரீசுக்குள் வந்தவுடன் அவர் உடலில் ஒரு ஆவி புகுந்துவிடும்
முழுக்க விக்கெட் கவனமே ஒருவித விளையாட்டு வெறியோடு அந்த முகத்தில் தெரியும் பந்துக்கு முன்பாக கண்கள் வெளிவரும், அந்த உதடுகள் ஆளுக்கொரு பக்கம் செல்லும்
ஒரு மாதிரியான விளையாட்டு வெறி முகபாவம் அது
அதை வெளிபடுத்துவது நிச்சயம் விஜய் சேதுபதிக்கு மகா சவாலான விஷயம்
நிச்சயம் அந்த காட்சியினை தவிர்க்க முடியாது, அக்காட்சி இல்லை என்றால் அது முரளிதரனின் கதையே அல்ல

