அந்த வரலாற்று இடத்தை அவருக்குத்தான் கொடுக்கவேண்டும்

இளையராஜா இசை அமைக்க வந்து 40 ஆண்டுகள் ஆகின்றன, இந்த 40 ஆண்டுகளும் அவர் எங்கு இசை அமைப்பார் என்றால் பிரசாத் ஸ்டூடியோவில்தான் இசை அமைப்பார், அந்த ஏ.எல் பிரசாத் என்பவர் தான் பயன்படுத்திய அறையினையே கொடுத்திருந்தார்

இளையராஜாவின் சாகா வரம்பெற்ற பாடல்கள் இங்கிருந்துதான் உதயமாயின, அப்பாடலின் கருவறை அது கர்ப்பகிரகமும் அது, இசையின் சன்னதி அது

அப்படிபட்ட ஸ்டூடியோவில் இதுகாலமும் சிக்கல் இல்லை. பிரசாத் ஸ்டூடியோ நிதிசிக்கலில் சிக்கியபின் இளையராஜாவிடன் வாடகை கேட்டிருகின்றார்கள், அவரும் என்ன வாடகையோ அதை தரசம்மதம் என ஒப்பந்தமும் இட தயாராகியிருக்கின்றார்

ஆனால் இப்பொழுது காலிசெய்தே தீரவேண்டும் என்கின்றது ஸ்டூடியோ தரப்பு

இளையராஜா இது நான் உருவான இடம், விற்பதாக இருந்தால் எனக்கே கொடுங்கள் என கேட்டாலும் வழியில்லை

இளையரஜாவினை காலி செய்ய சொன்னார்கள், அவரோ உடனே எப்படி முடியும் என காவல்நிலையம் சென்றிருக்கின்றார், அங்கு ஏதோ சரியில்லை

அதன்பின் நீதிமன்றம் சென்றிருக்கின்றார், அங்கும் இழுபறி

அதன்பின்புதான் தெரிந்திருக்கின்றது தமிழக அரசின் முக்கிய புள்ளி அந்த ஸ்டூடியோவினை வாங்கியிருக்கின்றது, அது விளையாடுகின்றது

அப்புள்ளி யாரென்பதுதான் இப்பொழுது கேள்வி

முன்பு ஜெயா காலத்தில் இது சசிகலா வேலை என சந்தேகமே இல்லாமல் சொல்லலாம் , சொல்ல ஒரு வழி இருந்தது, இன்று அதுவுமில்லை

அந்த அளவு ஆகிவிட்டது தமிழக நிலை

எதிர்கட்சி இதை கையில் எடுத்து ஆடலாம், ஆனால் மைக்கை கொடுத்தால் கிராமிய பாடகர் இளியராஜா எனும் பேசும் வகையில் அதுவும் இருக்கின்றது

எம்மை பொறுத்தவரை அந்த இடம் இளையராஜா எனும் மாபெரும் கலைஞன் உருவான, தமிழின் அழியா பாடல்கள் உருவான இடம், அந்த வரலாற்று இடத்தை அவருக்குத்தான் கொடுக்கவேண்டும்

உழுபவனுக்கு நிலம் சொந்தம், குடியிருப்பவனுக்கு வீடு சொந்தம் ஏனும் பொழுது 40 வருடமாக இசை அமைத்த இடத்தை அதுவும் தகுந்த விலைக்கு கேட்கும் பொழுது கொடுக்காமல் இழுத்தடிப்பு செய்வது சரி அல்ல‌

நீதிமன்றம் நல்ல தீர்ப்பினை கொடுக்கட்டும், குறைந்தபட்சம் 3 ஆண்டு அவகாசமாவது கொடுக்கட்டும்