அந்த வார்த்தை அவனுக்கு மட்டும் சொந்தமா?
இங்கிருந்துகொண்டு இலங்கை குண்டுவெடிப்பினை பார்த்து இஸ்லாமிய பயங்கரவாதம் அது இது என சொன்னாலும் அங்கிருந்து கிடைக்கும் சில கோணங்களும் அவற்றின் தகவல்களும் இச்சம்பவத்தை வேறு மாதிரி அலசுகின்றன
அதாவது கடந்த ஆண்டுதான் புத்த சிலை உடைப்பு சர்ச்சையும் இன்னும் பலவும் இந்த கோஷ்டி செய்திருக்கின்றது, ஒரு புத்த பேரினவாத நாட்டில் பெரும்பான்மை மதமான சிங்களனின் புத்தமத ஆலயத்தை குறிவைக்காமல் ஏன் தமிழர் வாழும் அதுவும் கிறிஸ்தவ பகுதியினை தாக்கினார்கள் என்பதுதான் பலருக்கு கேள்வி
நிச்சயம் இலங்கையில் இஸ்லாமியருக்கும் கிறிஸ்தவருக்கும் தகறாறு அல்ல, பெரும்பான்மை சமூகம் சிங்கள பவுத்த சமூகம், சர்ச்சையும் அவர்களோடே
பின்னர் ஏன் இந்த கிறிஸ்தவ தமிழர் மேல் குறி?
அங்கிருக்கும் சிலரிடம் கேட்டால் அவர்கள் சொல்லும் பதில் இம்மாதிரிதான் முடிகின்றது
அந்த புலிகள் காட்டிய இஸ்லாமிய வெறுப்பும், ஒரே இரவில் நடந்த ஆயிரகணக்கான இஸ்லாமியரின் வெளியேற்ற கொடூரமும் கொஞ்சம் அல்ல
ஆயிரம் காரணங்களை புலிகள் சொன்னாலும் அவர்களின் ஒரே காரணம் இஸ்லாமிய மக்களின் சொத்துக்களை கொள்ளையடிப்பதாகவே இருந்தது
இஸ்லாமிய சமூகத்திடம் பெருவாரியான பணத்தை புலிகள் கோரியதும், ஓரளவுக்கு மேல் அச்சமூகம் கொடுக்க மறுத்ததுமே பிரச்சினையின் மூலம்
யாரையும் நம்பாத பிரபாகரன் வழக்கம் போல் இஸ்லாமியரையும் நம்பவில்லை அதைவிட இஸ்லாமியரின் திரண்ட சொத்துக்கள் புலிகளுக்கு நாக்கை சுழற்ற வைத்தன
அடித்துவிரட்டிவிட்டு அவற்றை பறிக்க எண்ணினார்கள், அந்த கொடூரத்தை செயல்படுத்தினார்கள்
வெறும் 500 பணம் மட்டும் எடுத்துகொண்டு இஸ்லாமியர் தங்கள் கட்டுபாட்டில் இருந்து காலிசெய்ய வேண்டும், நகையோ உடமைகளையோ தொட கூடாது என விரட்டி அடித்தது எல்லாம் கொள்ளை
அன்று இஸ்லாமியருக்கு யார் நீதி கேட்டார்கள்? ஒரு சத்தம் வந்திருக்கும்?
இல்லை வரவே இல்லை, சரி அந்த அநீதிக்குத்தான் வேண்டாம், காத்தன் குடியில் தொழுகை செய்யும் மசூதியில் புலிகள் புகுந்து சுட்டார்களே
பச்சை குழந்தை முதல் 190 பேர் செத்தார்களே , அந்த மசூதியே ரத்த குளம் ஆயிற்றே அன்று ஒருவார்த்தை உலகம் கேட்டதா?
சிங்கள அரசும் கேட்கவில்லை, இந்தியாவும் கேட்கவில்லை, உலகில் கேட்க ஒரு நாதியுமில்லை
இலங்கையில் இனி இஸ்லாமியரே தங்களை பாதுகாத்து கொள்ளவேண்டும் என்ற ஒரு விபரீத எல்லைக்கு அச்சமூகம் அப்பொழுதுதான் தள்ளபட்டது
இன்று 400 கிறிஸ்தவர்கள் ஆலயங்களில் கொல்லபட்டவுடன் அலறும் உலகம், அன்று 200 இஸ்லாமியர் மசூதியில் கொல்லபட்டபொழுது அமைதி, கனத்த அமைதி
அந்த இஸ்லாமியர் மனிதர் இல்லையா? அவர்களுக்கு உயிர் இல்லையா?
1990ல் இஸ்லாமியன் செத்தால் ஒரு நீதி, 2019ல் கிறிஸ்தவன் செத்தால் உலகம் பொங்குமா?
எக்காலமும் இந்த சர்ச் குண்டுவெடிப்பு ஏற்கதக்கதல்ல, அது காட்டுமிராண்டிதனத்து உச்சம், ஆனால் அதே காட்டுமிராண்டிதனத்தை புலிகள் செய்தபொழுது ஏன் மேற்குலகம் கண்டுகொள்ளவில்லை
விஷயம் அதுதான், புலிகள் மேற்குலகின் கைகூலிகள் என்ற அபிப்பிராயம் இலங்கை முழுக்க உண்டு, புலிகளுக்கும் கிறிஸ்தவமெஷினரிகளுக்கும் ஐரோப்பிய அரசுகளுக்கும் இடையிலான தொடர்பு வலுவானது
அதனால் புலிகளை ஒருவரும் கண்டிக்கவில்லை கண்டிக்கவும் மாட்டார்கள்
அந்த காத்தன்குடி மசூதியில் இன்றும் புலிகள் சுட்ட தோட்டாவின் வடுக்கள் உண்டு
சுருக்கமாக சொன்னால் இந்தியாவின் ஜாலியன் வாலாபாக்கில் இருக்கும் வெள்ளையனின் தோட்டா வடு போல உண்டு
அது ஒவ்வொரு இஸ்லாமியன் மனதிலும் பாய்ந்த தோட்டா, அடிமனதின் ஆழத்தில் அந்த வலி இருக்கும்
அதை கேட்டும் அந்த சம்பவத்தை அசைபோட்டும் வளர்ந்த தலைமுறை ஒன்று சில வேண்டதகாத சக்திகளோடு பழிவாங்க போகின்றோம் என கிளம்பிவிட்டது
அதனால்தான் புலிகளை காத்த மேல்நாட்டு கிறிஸ்தவர்கள், புலிகளுக்கு ஆதரவாக இருக்கும் தமிழர் என மிக சரியாக திட்டம் போட்டு சாடிவிட்டார்கள்
எக்காலமும் இது ஏற்றுகொள்ளமுடியா கொடூரம், இதை எல்லோரும் கண்டிக்கின்றோம் இனி ஒருகாலமும் இப்படி நடக்க கூடாது என கண்ணீர்மல்க பிரார்த்திகின்றோம்
ஆனால் புலிகளின் கொடுமை இதைவிட பன்மடங்கு மோசம், அதை ஏன் உலகெல்லாம் மறைக்கின்றார்கள், அதை ஏன் யாரும் பேசவில்லை
இந்த கொடூரர்கள் செய்த இக்கொடிய காரியத்தை தூஷிக்கும் உலகம் புலிகளின் அந்த கொடுமையினையும் கண்டித்தால் என்ன?
இன்றுவரை யாரும் அதுபற்றி பேசுவதில்லை
இலங்கை இஸ்லாமியரின் மனதிலும் ஏகபட்ட வலிகள் உண்டு, அந்த வலியினை சில பயங்கரவாத சக்திகள் சிலரை பயன்படுத்தி இப்பாதகத்தை செய்துவிட்டன
காத்தன்குடி வலியோடு இந்த படுபாதக வலியினையும் சேர்த்து சுமக்கின்றது அந்த அழகிய தீவின் இஸ்லாமிய சமூகம்..
நடந்திருப்பது காட்டுமிராண்டிதனத்து உச்சமே அதில் சந்தேகமே இல்லை
ஆனால் இன்று கொதிக்கும் உலக நாடுகள், அந்த அப்பாவி இஸ்லாமியரை கதற கதற அதுவும் வழிபாடு நடக்கும் மசூதிக்குள் புகுந்து சுட்டு வெறியாட்டம் ஆடிய புலிகளை ஏன் கண்டிக்கவில்லை
கடைசி வரை ஆண்டன் பாலசிங்கமும், கிட்டுவும் தமிழ்செல்வனும் லண்டனில் தியாகிகள் போல அமர வாய்ப்பு கொடுக்கபட்டது ஏன்?
அன்றே அந்த இஸ்லாமியர் மேல் நடந்த கொடூரத்திற்காக புலிகளை லண்டனில் இருந்து வெளியேற்றினால்தான் என்ன? செய்தார்களா? இல்லை
ஆம் புலிகள் கிறிஸ்தவ கள்ள கூட்டணி அப்படி
நிச்சயம் இன்று இந்த கொழும்பு கிறிஸ்தவர்களுக்காக உலகம் அழுகின்றது, ஆனால் அந்த காத்தன்குடி சாவுக்காக யாரும் ஒருசொட்டு கண்ணீர் கூட விடவில்லை
இந்த கள்ளபாதிரி ஜெகத்கஸ்பர், சைமன் எல்லாம் பிரபாகரனின் ஒரு உரையாடலை சொல்வார்கள்
“அவலத்தை கொடுத்தவனுக்கே அதை திருப்பி கொடு” என்பானாம் பிரபாகரன்
ஆம் ராஜிவ் கொலையினை எல்லாம் இப்படித்தான் மடைமாற்றுவார்கள்
இதோ திருப்பி கொடுத்திருக்கின்றார்கள், இதற்குத்தான் இவ்வளவு ஒப்பாரி
நடந்தது மிகபெரும் அவலம், அதை தொடங்கி வைத்தது நிச்சயம் புலிகள் அதற்கு துணைபோனது சர்வதேசம்
அதன் எதிரொலி கடந்தவாரம் நாமெல்லாம் கேட்டது
அதேதான், “அவலத்தை கொடுத்தவனுக்கே அதை திருப்பி கொடு” என்பானாம் பிரபாகரன்,
அந்த வார்த்தை அவனுக்கு மட்டும் சொந்தமா?