அந்த வீடியோ வந்து இருநாட்கள் ஆகின்றது…

அந்த வீடியோ வந்து இருநாட்கள் ஆகின்றது, அதன் உண்மை தன்மை அறிய ஒரு அம்மா விசுவாசியுமில்லை. அதனை பார்த்து அழ ஒரு தொண்டனுமில்லை

ஜெயா பற்றிய பிம்பம் உடைந்து சிதறுகின்றது, இனி ஜெயாவின் மர்மத்தையோ அவரின் படத்தினையோ காட்டி யாரும் வோட்டு வாங்க முடியாது என விளங்குகின்றது

மிக எளிதாக அந்த வீடியோவினை கடந்துவிட்டது தமிழகம், யாருக்கும் அனுதாபமில்லை யாருக்கும் சோகமில்லை

தமிழகம் அதன் போக்கில் இயங்குகின்றது, சசிகலா குடும்பத்தில் மட்டும் வெட்டு குத்து இருக்கும் போல‌

ஒரு வெங்காய வெடி அதிர்வினை கூட கொடுக்காத வீடியோவினையா இவ்வளவு நாளும் பொத்தி வைத்தோம் என எல்லா தரப்பும் விக்கித்து நிற்கின்றன‌

இது போலியா இல்லையா என்பது வேறுவிஷயம், நாளை உண்மை வீடியோ வந்தால் கூட காண்பதற்கோ விவாதிக்கவோ யாருமில்லை

தன்னை தமிழகம் தூக்கி எறிவதை உணராத அந்த அம்மா, அந்த ஜூஸை குடித்துகொண்டே இருக்கின்றது