அந்தM.Aரூபன் எனும் விளையாட்டு வீரன் இன்று காலமாகிவிட்டார்
அந்த மனிதர் அப்பழுக்கற்ற காங்கிரஸ்காரர், அதை தவிர ஏதும் அறியாதவர்
மிக சிறந்த விளையாட்டு வீரரும் கூட 1970களில் மிகபெரும் விளையாட்டு முகமாக அவர் அறியபட்டார். கபடியிலும் அவ கொடி உயர பறந்தது
அவர் நெல்லை கிழக்கு கடற்கரையின் மீணவ குடும்பம், போக்குவரத்து பெருகிய காலங்களில் வள்ளியூருக்கு பெயர்ந்த குடும்பத்தின் வாரிசு அவர்
இன்று பெருநகரமாக வெடித்து பெருகிவிட்ட வள்ளியூர் அன்று சிறு கிராமம் போலத்தான் இருந்தது, எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருந்தது
அக்காலங்களில் அவர் எல்லோருக்கும் அறிமுகமான நபராக இருந்தார், குறிப்பாக விளையாட்டு. ஓட்டபந்தயமும் அவரின் இதர விளையாட்டுக்களும் தனிபுகழை அவருக்கு பெற்று தந்தன
நல்ல பயிற்சியாளன் கண்களில் பட்டிருந்தால் மிகபெரும் உயரத்தை அவர் எட்டியிருக்க கூடும், ஆனால் விதி அதுவல்ல
எங்கள் எளிய கிராமத்துக்கும் அவருக்கும் தொடர்பு நிறைய உண்டு, வள்ளியூர் பஜாரில் அவருக்கு சொந்தமான நிலங்கள் இன்று பலகோடிக்கு உண்டு சிலவற்றை இழந்தார் சிலவற்றை தக்க வைத்தார்
ஸ்டார் ஹோட்டல் என ஒரு உணவகம் கூட நடத்தியதாக நினைவு
1980களில் எங்கள் கிராமத்தில் கபடி போட்டி நடந்தது, முடிவில் அந்த பகுதி ஜாம்பவனான கண்ணநல்லூர் அணிக்கும் திருமலாபுரம் அணிக்கும் முட்டிகொண்டது
அதில் நியாயம் திருமலாபுரம் அணி பக்கம் இருந்தது, அட்டகாசம் கண்ணநல்லூர் அணிபக்கம் இருந்தது, கிட்டதட்ட பாகிஸ்தான் போல அவர்களாக ஒரு நியாயம் பேசிகொண்டிருந்தார்கள்
விஷயம் கலவரமானது , ஆனால் போட்டி நடத்திய கிராமம் எனும் வகையில் எம் நிலை சிக்கலானது
அங்குதான் அந்த மனிதர் எங்கள் சார்பாக களமிறங்கினார், மாவட்ட நீதிபதி எஸ்பி முதல் யாரை எல்லாமோ அழைத்து வர உதவினார்
களத்தில் அவரே இறங்கி விளையாடிய காட்சிகளும் உண்டு, மிக அட்டகாசமான கபடி வீரர்
எப்படியோ நீதிபதி எஸ்பி தலமையில் அந்த போட்டி நடக்க உதவினார்,
அந்த காட்சிகள் எல்லாம் கண்ணில் நிழலாடுகின்றன.
எமது தலைமுறைக்கு முந்தைய விளையாட்டு வீரர் அவர், ஒரு முறை பள்ளியில் அவர் ஜோதி ஏந்தி ஓடி வந்த அந்த காட்சி மறக்க முடியாதது
அந்தM.Aரூபன் எனும் விளையாட்டு வீரன் இன்று காலமாகிவிட்டார்
காங்கிரஸின் மிகபெரும் அபிமானி அவர், சில பதவிகளை கூட வகித்தார்
வள்ளியூர் பகுதி மிகசிறந்த விளையாட்டு வீரனை இழந்துவிட்டது , காங்கிரஸ் தன் மிகசிறந்த தொண்டனை இழந்துவிட்டது
அந்த குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள், வள்ளியூரில் அவர் புகழும் அடையாளமும் ஒரு காலமும் அழியபோவதில்லை
அந்த வள்ளியூர் பாத்திமா மாதா அவர் ஆன்மாவுக்கு நித்திய இளைப்பாற்றியினை அருளட்டும்.