அந்நிய நாட்டவருக்கான தீர்வு என்ன என யாராவது பேசுவார்களா?
இவ்வளவு பேசுகின்றார்கள், சரி மத்திய அரசு இந்துவெறி ஆட்சியாகவே இருந்து தொலையட்டும், இங்கிருந்து வெளியேற்றபட போகும் அந்நிய நாட்டவருக்கான தீர்வு என்ன என யாராவது பேசுவார்களா?
இது பூரண இஸ்லாமிய குடியரசு என சொல்லும் இஸ்லாமிய நாடுகள் அவர்களை ஏற்க தயாரா?
இம்ரான்கான் ஏற்க தயாரா?
செல்வத்தில் கொழிக்கும் அரபு நாடுகள் அவர்களை ஏன் ஏற்க கூடாது? துருக்கி , எகிப்து முதலான பலம் வாய்ந்த இஸ்லாமிய நாடுகள் ஏன் ஏற்க கூடாது?
உஸ்பெக் முதல் நைஜீரியா வரை எவ்வளவு தேசங்கள்?
ஒரு தேசம் ஏற்கட்டும் பார்க்கலாம், பாலஸ்தீனிய அகதிகளையே விரட்டிவிட்ட தேசங்கள் அவை, சிரிய மக்களுக்கே அங்கு இடமில்லை
இஸ்லாமிய அகதிகளை இஸ்லாமிய நாடுகள் ஏற்கவேண்டும் என ஏன் ஒருவனும் சொல்ல காணோம்?
சொல்லமாட்டார்கள், சொல்லவே மாட்டார்கள்
மாறாக இந்த அரசை குறை சொல்ல எதையாவது சொல்லிகொண்டே இருப்பார்கள், அதற்கெல்லாம் இந்த அரசு அசையாது இந்த தேசமும் அஞ்சாது