அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவதற்கு தி.மு.க.வுக்கு தகுதி இல்லை

அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவதற்கு தி.மு.க.வுக்கு தகுதி இல்லை

இப்படி தமிழிசை, சீமான் போன்ற பல சத்தங்கள் கேட்டுகொண்டே இருக்கின்றன‌

என்று திமுக அனைத்து கட்சி கூட்டம் கூட்டவில்லை?

ராஜாஜி காலத்தில் இருந்து எல்லா காலங்களிலும் அனைத்துகட்சி கூட்டத்தை கூட்டியே வந்தது, அதன் அரசியல் அப்படித்தான் இருந்தது

மிசா காலங்கள் உட்பட எல்லா காலத்திலும், ஈழ விவகார காலங்களிலும் அது அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி கொண்டேதான் இருந்தது

ராமசந்திரனாவது தன் அல்லக்கைகளை கூட்டிகொள்வார், ஜெயா சுத்த மோசம், இவர்கள்தான் இம்மாதிரி தனி ஆவர்த்தனங்களை தொடங்கி வைத்தவர்கள்

ஆக அவர்களுக்கு தகுதி இல்லை என்பது மிக பொருத்தமானா வார்த்தை, அனைத்து கட்சி கூட்டம் என்றெல்ல, எதற்குமே தகுதியில்லா கட்சி அது.

ஆனால் திமுக என்றுமே எல்லா பிரச்சினையிலும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியது என்பதுதான் வரலாறு

இது சீமானுக்கு தெரியாது, அவர் யாரென்று சில நேரம் அவருக்கே தெரியவில்லை

தமிழிசைக்கும் தெரியாது, ஆனால் குமரி அனந்தனுக்கு தெரியும்

அம்மா தமிழிசை, இந்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு திமுகவிற்கு உரிமை இருக்கின்றதா, இல்லையா? என உங்கள் தகப்பானாரிடம் கேட்டாவது தெரிந்துகொள்ள கூடாதா?