அனைத்தையும் செய்கின்றது பாகிஸ்தான்

கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க என்ன செய்ய முடியுமோ அனைத்தையும் செய்கின்றது பாகிஸ்தான்

அந்த புல்வாமா தாக்குதல் பதிலுக்கு இந்தியாவின் எல்லை தாண்டிய தாக்குதல் என பிப்ரவரிமாதம் கடும் பதற்றம் நிலவிய பொழுது, எம்.ஐ 17 ரக ஹெலிகாப்டர் ஒன்று விழுந்தது நினைவிருக்கின்றதா?

இந்தியா அதை விபத்து என்றது, ஆனால் விபத்து என்றால் அது உடைந்தா விழும் என்ற கேள்வி அப்பொழுதே எழுந்தது?

காஷ்மீர் தீவிரவாதிகளிடம் சாம் ஏவுகனைகள் வந்துவிட்டதா என்ற பதற்றம் எல்லாம் வந்தது, பின் விஷயம் அமைதியானது

இப்பொழுது பாகிஸ்தான் விஷயத்தை கிளறுகின்றது

அந்த ஹெலிகாப்டரை வீழ்த்தியது இந்திய தரப்பே, தவறுதலாக தங்கள் ஹெலிகாப்டரை சுட்டுவிட்டார்கள் என விஷயத்தை கொண்டுவருகின்றது

அவர்கள் சொல்லவருவது இதுதான்

நிச்சயம் ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தபட்டிருக்கின்றது, பாகிஸ்தான் அதை செய்யவில்லை எனும்பொழுது இந்திய ராணுவே தவறுதலாக செய்திருக்க முடியும் என்கின்றது

இந்திய விமானபடை கனத்த அமைதி, அதில் ஏதோ ரகசியமும் இருக்கலாம்