அன்று நேரு இன்று மோடி
இரண்டாம் உலகபோரின் தொடர்ச்சியாகவும் இங்கு மழை பொய்த்ததாலும் அப்பொழுது வறட்சி நிலவியது
இந்தியா அமெரிக்காவிடம் இருந்து கோதுமையும், பர்மாவிடம் இருந்து அரிசியும் வாங்கி சமாளித்தது
அந்த கொடிய 1960களின் சூழல் அப்படி இருந்தது
ஆனால் ஏதோ காமராஜர்தான் அரிசியினை பதுக்கியதாக ஒப்பாரி வைத்தது திமுக , இந்த ரூபாய்க்கு 3 படி அரிசி என அவர்கள் ஒப்பாரி வைத்ததும் ஆட்சிக்கு வந்தபின் அரிசிக்காக மதுகடை திறந்ததும் அப்படித்தான்
பின்பு குழப்பி அடித்து நாசமாக்கினார்கள்
ராமசந்திரன் காலத்திலும் ஒரு பஞ்சம் வந்தது, மரவள்ளி கிழங்கு சில இடங்களில் உணவாயிற்று
அய்யய்யோ மரவள்ளி கிழங்கு தின்ன வைத்தான் மலையாளத்தான் என கிளம்பினார்கள்
ஜெயா காலத்தில் காவேரி பொய்க்க, அய்யய்கோ எலிக்கறி தின்கின்றான் எழில்மிகு தமிழன் என கிளம்பினார்கள்
இப்பொழுது உலக நிலவரம் காமராஜர் காலம் போலவே இந்தியாவினை உலுக்க மறுபடி கிளம்பிவிட்டார்கள்
அறியாத மக்களை குழப்பி பயமுறுத்துவதில் திமுகவுக்கு அலாதி இன்பம்
அதை இப்பொழுதும் செய்ய கிளம்பியிருக்கின்றது என்பதன்றி விஷயம் ஒன்றுமல்ல
அன்று நேரு இன்று மோடி அவ்வளவுதான் வித்தியாசம்..