அப்படியும் அறிவு வராதது மகா சோகம்..
ஒரு கோஷ்டி கிளம்பி அழிச்சாட்டியம் செய்கின்றது, அய்யகோ பிராமணர் அப்படி மனுதர்மபடி ஆண்டனர், கல்வி மறுத்த்தனர், நிலம் வைத்திருந்தனர் அராஜகம் செய்தனர் , வெள்ளையன் வந்துதான் அவர்களை அடக்கினான் மறுபடியும் அவர்கள் மனுதர்ம ஆட்சிக்கு வருகின்றனர் ஐயகோ.. என ஒப்பாரி
மனுதர்மம் என்பது ஒரு நாட்டுக்கான நீதியாய் இருக்க வேண்டும் என்பது கல்தோன்றி மண்தோன்றா காலத்தில் இருந்த ஒரு ஆலோசனை குறிப்பு அது , ஆனால் எங்கும் சட்டமாக்கபடவில்லை
எந்த மன்னன் மனுதர்மபடி ஆண்டான்? ஒரு குறிப்பு சொல்லமுடியுமா என்றால் முடியாது.
அரேபியால் கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என சட்டங்கள் இருந்தபொழுது, ரோமருக்கு முன்பே சிலுவை தண்டனைகள் இருந்த காலங்களில் இந்தியாவிலும் அச்சாயல் சட்டங்கள் இருந்தன (அவை மனுதர்மம் அல்ல) காலம் மாற் மாற மாறின
இன்று இத்தாலியில் சென்று போப் மட்டும் இல்லாவிட்டால் மறுபடியும் சிலுவையில் அறையும் தண்டனை வரும், சிங்கத்துக்கு மனிதனை இரையாக்குவார்கள் என்றால் செவிட்டில் அடிக்கமாட்டார்களா? போப்பாண்டவரே 100 ஏக்கர் வாடிகனில் அடைந்து கிடக்கின்றார்
பழைய ஏற்பாட்டு சட்டங்கள் அதாவது யூத சட்டங்கள் இஸ்லாமிய ஷரியத்தை விட மகா கடுமையானவை, இதோ யூத நாடு அமைந்தாயிற்று ஆனால் பழம் சட்டங்களை கொண்டுவரமுடியுமா?
ஜப்பானியரிடம் பலநூறு ஆண்டுக்கு முன்பிருந்த கொடும் சட்டங்கள் மனுகுலத்துக்கு கொடுமையானவை, இன்று அதையா பின்பற்றுகின்றார்கள்? இனி பின்பற்றத்தான் முடியுமா?
காலத்துக்கு ஒவ்வாத எதையும் திரும்ப கொண்டுவர முடியாது,மனு தர்மமும் அவ்வகையே
4 ஆயிரம் ஆண்டுக்கு முன்பான காலம் அப்படி , உலக நிலை அப்படி, தண்டனைகளும் அப்படி
இங்கு 2000 ஆண்டுக்கு முன்பு புத்தமதம் இருந்தது அசோகர் எல்லாம் ஆண்டார், அதில் பிராமணன் எங்கே வாழ்ந்தான்? இந்துமத பிராமணன் புத்த அரசில் எங்கே வாழ்ந்தான்
எங்கே மனுநீதி இருந்தது?
சாணக்கியன் குப்த பேரரசை நிறுவி கொடுத்தான், அக்காலம் இந்தியா வளமான நாடாய் இருந்தது, ஆனால் சாணக்கியன் என்ன பெரும் ஜமீந்தாராக இருந்தானா? நிலத்தை எல்லாம் வைத்திருந்தானா?
சந்திர குப்தனும் அவனுக்கு பின் அவன் குடும்பமுமே ஆண்டது
எந்த இடத்திலும் பிராமணன் அரசனாகவும் இல்லை, நில உடைமையாளராகவும் இல்லை
பொற்கால குப்த அரசில் மனுநீதி எங்கே இருந்தது?
அலெக்ஸாண்டரும் அவனை தொடர்ந்த செலூகஸ் நிகேடாரும் அவன் தூதனான மெகஸ்தனீஸும் மனுதர்ம ஆட்சி என எதை சொன்னார்கள்? அப்படி ஒன்று இருந்தால்தானே சொல்வதற்கு?
ஹர்ஷர், கனிஷ்கர், நந்த வம்சம் என யார் ஆட்சியில் மனுதர்மம் ஆண்டது?
அது குப்தர் காலத்திலுமில்லை, நந்த காலத்திலுமில்லை, அசோகர் காலமுதல் பகதூர் ஷா காலம் வரையிலும் இல்லை வெள்ளையன் காலத்திலுமில்லை
இந்து மன்னர்கள் என்றாலும் கூட மூவேந்தர் காலத்தில் இல்லை, ருத்ரம்பாள் காலத்தில், விஜயநகர சாம்ராஜ்யம், சாளுக்கியர் என யார் ஆட்சியிலும் இல்லை
மராட்டிய சிவாஜி ஆட்சியிலுமில்லை
திருமலை நாயக்கன், மங்கம்மாள் என பிற்கால இந்து அரசில் பிராமண் எங்கே இருந்தான்?
ராஜராஜ சோழன் ஆட்சியில் பிராமணன் எங்கே நிலக்கிழாராய் இருந்தான்?
அதன் பின் இஸ்லாமிய அரசுகள் வந்தன கோரி முதல் வெள்ளையன் வரும்பொழுது இரண்டாம் பகதூர் ஷா வரை 600 ஆண்டுகாலம் உங்கு இஸ்லாமிய ஆட்சி நடந்தது
இதில் எங்கே பிராமணன் ஆளமுடியும்? அவன் அதிகாரம் செலுத்தமுடியும்?
இஸ்லாமிய ஆட்சியில் நவாப் என்றும், நிஜாம் என்றும், சுல்தான் என்றும் நியமிக்கபட்டதில் எவன் பிராமனன்?
எந்த பிராமணனுக்கு நிலம் ஏக்கர் கணக்கில் இருந்தது?
சரி தெற்கே எடுத்தாலும் கூட நாயக்கர் அரசில் பிராமணர் நிலை என்ன? இன்றும் ரெட்டி நாயுடு என்றே நிலக்கிழார்கள் உண்டே தவிர ஏது பிராமணன்
பிராமண அரசனும் இல்லை, பிராமண நிலக்கிழாரும் இல்லை
கல்வி பிராமணன் கொடுக்க மறுத்தான் என்பார்கள், அன்று என்ன யழவு கல்வி இருந்தது என கேட்டால் சொல்ல தெரியாது
அன்று ஏதோ ராக்கெட் சயின்ஸ்சும், மூளை அறுவை சிகிச்சை மருத்துவம் வரை இருந்தது போலவும் அதை பிராமணன் கொடுக்கவில்லை என்றும் ஒரே அழிச்சாட்டியம், அன்று எங்கே விஞ்ஞானம், மருத்துவம், சட்ட கல்வி எலலம் இருந்தது?
அவதாரங்களில் கூட ராமனும் கண்ணனும் பிராமணரில்லை , பிராமணர் அக்கதையினை எழுதியிருந்தால் அவர்களை பிராமணனென மாற்றியிருக்கமாட்டானா?
3000 ஆண்டு வரலாற்றில் ஒரு மன்னனோ, ஒரு ஜமீந்தாரோ, ஒரு பெரும் வியாபாரியோ கூட பிராமணன் இல்லை
அன்றும் அது அரசனுக்கும் ஆலயத்துக்கும் அடிமை இனமே, சேவகம் செய்யும் இனமே
இன்றும் அது கைகட்டி வேலைபார்க்கும் இனமே, உழைப்பு விசுவாசம் பக்தி இதை தவிர அவர்களுக்கு என்ன தெரியும்?
அட இன்றும் திராவிட புரட்சி காலங்களை பாருங்கள்
ஒரு கல்விதந்தை, ஒரு பெரும் பணக்காரன், ஒரு ரவுடி, 30 ஆயிரம் கோடி முதலீடுசெய்யும் கட்சிக்காரன், தாதுமணல், கிரானைடு குவாரி, மணல் குவாரி இன்னபிற வரிசைகளில் ஒரு பிராமணனை காட்ட முடியும்?
பின் எங்கே இருந்தது அல்லது இருக்கின்றது பிராமண கொடுமை?
அன்று ஆண்ட வர்க்கமும் இன்றும் ஆளும் வர்க்கமும் பிராமணன் அல்லவே அல்ல, இதெல்லாம் மிக சிறு இனத்தை குறிவைத்து அரசியல் செய்யும் வன்மம்
ஹிட்லர் அதை செய்தான், இலங்கையில் சிங்களன் செய்தான்
இங்கு இல்லா பொய்களை சொல்லி பிராமண துவேஷத்தில் அரசியல் செய்கின்றார்கள், அட அப்படி செய்து உருபப்ட்டாலும் பரவாயில்லை நாசமாய் போகொண்டே இருப்பதுதான் சோகம்
அப்படியும் அறிவு வராதது மகா சோகம்..
