அப்படி ஒரு திட்டம் அவர்கள் அடிமனதிலும் இருக்கலாம்
இந்தோனேஷிய அரசு தன் தலைநகரை மாற்றபோவதாக செய்திகள் வருகின்றன
இப்போதைய ஜாவா தீவில் இருக்கும் ஜகார்த்தாவில் இருந்து தலைநகரை கிழக்கு பெருந்தீவான போர்னியோ ஐலன்ட் எனப்படும் கலிமந்தானுக்கு மாற்றலாம் என்கின்றன செய்திகள்
கலிமந்தன் என்பது இந்தோனேஷியா மலேசியா புரூனே என 3 நாடுகள் பகிர்ந்து கொள்ளும் தீவு, பெட்ரோல் வளம் அதிகம்
அங்கே எந்த இடம் புதிய தலைநகரம் என அறிவிக்கபடவில்லை, விரைவில் அறிவிக்கபடலாம்
பெருகிவரும் ஜகார்த்தாவின் மக்கள் தொகை அது ஏற்படுத்தும் சிக்கல் என மாற்றுவழியாக இதை செய்கின்றோம் என்கின்றார்கள்
இது டெல்லிக்கு எட்டியதா இல்லையா என தெரியவில்லை
காஷ்மீர் விவகாரத்தால் டெல்லி பிசி, இல்லையென்றால் இதை அடியொற்றி இந்திய தலைநகரை வாரனாசிக்கோ காசிக்கோ மாற்றிவிட சிந்தித்திருப்பார்கள்
சொல்லமுடியாது அப்படி ஒரு திட்டம் அவர்கள் அடிமனதிலும் இருக்கலாம்