அப்பாவி போலிருக்கின்றது

முன்பு இருந்த சீன அதிபர்களும் ராஜதந்திரிகளும் இந்தியா பற்றிய நிறைய விஷயம் தெரிந்து வருவார்கள், உணவு உட்பட பல விஷயங்கள்

இந்தியாவின் சிறப்பான இடங்களை பார்ப்பார்கள், சிறப்பு உணவுகளை உண்பார்கள் , சிறப்பான மனிதர்களை சந்திப்பார்கள்

முன்பு வரும் சீன அதிபர்களை பத்மினி நடனமும், எம்.எஸ் சுப்புலட்சுமி போன்றோரின் பாடல்களும் அப்படியே கட்டிபோட்டிருந்த காலம் உண்டு

இப்பொழுது இருக்கும் ஜின் பெங் என்பவருக்கு சாய்பல்லவியின் நடனம் கூட தெரியவில்லை பின் ஏன் டிரம்பிடம் அடிவாங்கமாட்டார்? அப்பாவி போலிருக்கின்றது

சீனத்து ஜிம்னாஸ்டிக் பெண்கள், ஒலிம்பிக்கில் தங்கம் வாங்கிய சீன பெண்கள் கூட சாய்பல்லவி அளவு லாவகமாக உடலை வளைக்க முடியாது.

அவ்வளவு நளினம் லாவகம் அழகு சாய்பல்லவியின் நடனம்..

அட அவருக்குத்தான் தெரியாது, இந்திய பிரதமாராவது தமிழ்நாட்டு சாய்பல்லவி பற்றியும் அவரின் அருமையான மின்னல் நடனம் பற்றியும் சொல்லியிருக்க வேண்டாமா?

இப்படிபட்ட தலமையினை வைத்து கொண்டு இந்தியா எப்படி வல்லரசாகும்?