அமித்ஷாவின் சர்ச்சை பேச்சு

அமித்ஷாவின் சர்ச்சை பேச்சு தொடர்கின்றது அல்லது அவர் பேசுவதை சர்ச்சையாக்குகின்றார்கள்

இந்தியினை தொடர்ந்து பலகட்சி ஜனநாயகம் தோற்றுவிட்டது அது தேவையற்றது என்பது போல பேசியிருக்கின்றார்

நாம் பாஜகவினை அணுக்கமாக கண்காணிப்பதால் சொல்கின்றோம் , இவர்கள் கொள்கை ஒன்றும் புதிது அல்ல‌

சுதந்திரம் பெற்றதில் இருந்தே ஆளாளுக்கு கட்சி தொடங்குவதை தடை செய்ய வேண்டும் என்ற குரல் இருந்தது, நேரு அதை மறுத்தார் பெருந்தன்மையாக அது ஜனநாயகம் இல்லை என்றார்

அதன் விளைவுதான் இன்று நாம் காணும் ஏகபட்ட கட்சிகள்

அகில இந்திய அளவில் இல்லா மாநில கட்சிகள் தடை செய்யபட வேண்டும் என்ற கொள்கை இந்திராவிடம் இருந்தது, ஆனால் மிசா மற்றும் பொற்கோவில் சம்பவத்துக்கு பின் அதை தள்ளி வைத்தார் அதற்குள் காலம் கொள்ளி வைத்தது

இப்பொழுது மாநில கட்சிகளை தடைசெய்து அகில இந்திய அளவில் சில கட்சிகள் இருக்கலாம் என்ற அளவில் அதாவது நேரு செய்ய தவறி, இந்திராவுக்கு காலம் அவகாசம் அளிக்காமல் நிறைவேறாமல் போன அந்த அகில இந்திய கட்சிகளுக்கே அங்கீகாரம் என்பது போல் நகர்கின்றார்கள்