அமித்ஷாவின் முதல் குரல் உலக கவனிப்பை பெற்றிருப்பது நிஜம்
காஷ்மீர் விவகாரத்தில் ஒரு விஷயம் கவனிக்கதக்கது, அது அக்சாய்சின் பகுதியினை கொஞ்சமும் விட்டுகொடுக்கமுடியாது என அமித்ஷா முழங்கியிருப்பது
அக்சாய் சின் என்பது ஒரு முக்கியமான இடம், இந்தியாவினையும் மத்திய ஆசியாவினையும் இணைக்கும் காரகோரம், பாமீர் முடிச்சு என கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம்
பட்டுச்சாலை காலத்திலே அதன் அவசியம் இருந்ததென்றாலும் மங்கோலிய பேரரசு வலுவாக இருக்கும் வரை அதை தொடும் தைரியம் யாருக்குமில்லை
பின்னாளில் சீக்கியர்கள் அதை கட்டுபாட்டில் வைத்திருந்தனர், பின்பு சீனருடன் சேர்ந்து வந்து சீக்கியரை திபெத்தியருடன் சேர்ந்து விரட்டிவிட்டு தங்கள் கட்டுபாட்டில் கொண்டிருந்தனர் திபெத்தியர்
அந்த திபெத்தியருடன் அக்ச்சாய்சின் தொடர்பாக சில ஒப்பந்தங்களை செய்தது பிரிட்டன்
பிரிட்டன் திபெத்திய ஒப்பந்தமே இன்றுள்ள சிக்கலுக்கு காரணம், ஒரு மாதிரியாக அதை கையாண்டார்கள் பிரிட்டானியர் காரணம் ரஷ்யா அப்பகுதியில் கால்பதிக்கும் ஆபத்து இருந்தது
பிரிட்டிசார் காலத்தில் அது காஷ்மீரின் அங்கமாயிற்று
பின்னாளில் காஷ்மீரின் ஒரு பகுதியாகவே , காஷ்மீர் மன்னருக்கு கட்டுபட்ட பகுதியாகவே அக்ச்சாய் சின் விளங்கியது, லடாக்கின் தொடர்ச்சி அது
இந்நிலையில் மக்மோகன் எல்லை கோடு என ஒன்றை இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே வகுத்திருந்தனர் பிரிட்டானியர் அது அக்ச்சாய் சின் பக்கம் அல்ல அருணாசல பிரதேச பக்கம்
சீனா அதை மனமார ஏற்றுகொள்ளவில்லை மாறாக அன்றைய தேதிக்கு தலையாட்டிவிட்டு சென்றது
பிரிட்டன் வீழ்ந்து இந்தியா சுதந்திரம் பெற்றதும் அந்த மக்மோகன் கோட்டினை அழித்து மறுகோடு இட்டது சீனா
நேரு அதை பெரிதும் கண்டுகொள்ளவில்லை மாறாக மக்மோகன் கோட்டினை மதிக்கவேண்டும் என சொல்லிகொண்டே இருந்தார்
மாவோவின் சீனா பெரும் சீற்றமாக சீறியபொழுது திபெத்தை விழுங்கி அக்ச்சாய் சின்னும் எங்களுக்கே என்றது
நிலமையின் விபரீதத்தை உணர்ந்த இந்தியா போர் தொடுத்து பார்த்தது ஒன்றும் நடக்கவில்லை, சில பகுதிகளை கூடுதலாக ஆக்கிரமித்தது மாவோ
அக்சாய்சின் பகுதியின் முக்கியத்துவத்தினை உணர்ந்த சோவியத் ரஷ்யாவுக்கு அப்பகுதி செஞ்சீனத்திடம் இருப்பது சரியென பட்டதால் அமைதி காத்தது
நேருவும் அமைதி காத்தார், இந்திராவுக்கு அப்பகுதியில் சில திட்டங்கள் இருந்தன, சிக்கிமினை இணைத்தார் இன்னும் சில காரியங்களை செய்யும் முன் பஞ்சாப் சிக்கலும் அந்த தீவிரவாதமும் அவர் உயிரை குடித்தது
அதன்பின் வந்த பிரதமர்கள் யாரும் அதுபற்றி பேசவில்லை
பாதுகாப்புதுறை அளவில் பேசினால் அருணாசல பிரதேசத்து தபாங் பகுதியினை கொடுத்தால் அக்சாய் சின்னில் இருந்து வெளியேறுவதாக சீன் போட்டது சைனா
முதன் முதலில் இந்த சிக்கலை தைரியமாக பேசியவர் வாஜ்பாய்
” பாகிஸ்தானைத் தவிர ஒரு மூன்றாவது நாடு ஜம்மு-காஷ்மீரின் ஒரு பகுதியை அதன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், காஷ்மீர் சிக்கலைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளின்போது, பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீருடன் சீனா ஆக்கிரமிப்பின்கீழ் உள்ள பகுதிகளும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்” என வாஜ்பாய் உறுமிமார்
அவரும் உறுமினாரே தவிர சீனா என பகிரங்கமாக சொல்லவில்லை
அடுத்து வந்த மன்மோகன்சிங் முழு பிசினஸ் மேன். அவரின் திட்டம் முழுக்க பொருளாதாரம் இன்னபிற வகையறா
மும்பையில் சுட்டாலும் டெல்லியில் சுட்டாலும் காஷ்மீரில் சுட்டாலும் “அதெல்லாம் பார்த்தால் பொழைப்பது எப்படி?” என்ற ரீதியில் நகர்வார்
மோடி அரசு வாஜ்பாய் வழி, அதுவும் இரண்டாவது பெருவெற்றியில் கடந்தமுறை தயங்கியதை எல்லாம் செய்கின்றார்கள்
அந்த வழியில் அக்சாய்சின் பற்றி பேசுகின்றார் அமித்ஷா
(அக்சாய் சின் இல்லையென்றால் அப்படியே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இல்லையென்றால் நிலம் வழியாக பாகிஸ்தானை அடைவது சீனாவுக்கு பெரும் பின்னடைவு
இதனால்தான் அக்சாய்சின்னை குறிவைத்து வெட்ட நினைக்கின்றது இந்தியா)
வாஜ்பாய்க்கு பின் அமித்ஷா என்பவரே அக்சாய்சின் இந்தியாவின் பகுதி அதற்காக உயிரை கொடுப்பேன் என பகிரங்கமாக பேசியிருக்கின்றார்
கிட்டதட்ட 100 ஆண்டுகால சிக்கல் இது, ஏகபட்ட ஒப்பந்தம் இன்னும் உடன்பாடு உண்டெனினும் சீனா ஒரு முடிவுக்கு வராது
ஒருநேரம் சரி என்பதும் மறுநேரம் மாறிவிடுவதும் அவர்கள் வழக்கம், ஒரு முடிவுக்கும் வரமாட்டார்கள்
சிக்கலான விவகாரத்தை கையில் எடுத்திருக்கின்றார் அமித்ஷா அதை உலகம் கவனிக்கத்தான் செய்கின்றது
பாபர்மசூதி போல ஓடிசென்று இடிக்கமுடியா இடியாப்ப சிக்கல் என்றாலும் அமித்ஷாவின் முதல் குரல் உலக கவனிப்பை பெற்றிருப்பது நிஜம்
