அமெரிக்காவின் வெர்ஜீனியா மாநிலம் பொங்கலை உலகின் பழமையான கலாச்சார பண்டிகையாக அறிவிப்பு

அமெரிக்காவின் வெர்ஜீனியா மாநிலம் பொங்கலை உலகின் பழமையான கலாச்சார பண்டிகையாக அறிவித்தாயிற்று , இனி அது அங்கு அரசு விழாவாக நடைபெறும்

பிரிட்டன் பிரதமர் தெரசா மே தமிழரால் இங்கிலாந்திற்கு பெருமை என நெகிழ்ந்திருக்கின்றார்

தமிழர் இருக்குமிடமெல்லாம் பொங்கல் மிக விமரிசையாக கொண்டாடபடுகின்றது, அந்நாட்டு தலைவர்கள் எல்லாம் வாழ்த்து தெரிவிக்கின்றார்கள்

பிஜி முதல் மேற்கிந்திய தீவு, தென்னமெரிக்கா வரை வெள்ளையன் தமிழரை அழைத்து சென்றான், அவன் சொன்ன காரணம் தமிழர்கள் மிக சிறந்த உழைப்பாளிகள். அதனை விட முக்கியம் மகா விசுவாசமானவர்கள், நன்றி மிகுந்தவர்கள்

அப்படி உலகெல்லாம் உழைக்க சென்ற இனம், தன் பாரம்பரிய கொண்டாட்டத்தை மறக்காமல் எடுத்தும் சென்றது

அந்த உழைப்புக்க்கும், பாரம்பரியத்திற்கும் பெரும் அங்கீகாரம் கொடுக்கும் விஷயத்தில் மேல்நாடுகள் இறங்கியிருப்பது வாழ்த்துகுரியது

விரைவில் அகில உலக அங்கீகாரம் பெற்ற விழாவாக , உலக விழாவாக பொங்கல் கொண்டாடபடும் சாத்தியம் உள்ளது

ஒவ்வொரு தமிழனும் இதனை நினைத்து பெருமைபடலாம்.