அமெரிக்காவில் லாஸ் வேகாஸில் துப்பாக்கி சூடு : 60 பேர் பலி
இதுவரை இல்லா மிகபெரிய அளவில் அமெரிக்காவில் லாஸ் வேகாஸில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது, 60 பேர் பலி எனவும், 500 பேருக்கு மேல் காயம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முதல் காரணம் அமெரிக்க வாழ்க்கை முறை, தனி நபர் சுதந்திரமிக்க நாடு, தங்கள் மகிழ்ழ்சியே முக்கியம் என நினைக்கும் மனப்பான்மை அது. ஒரு கட்டத்தில் ஏதாவது ஒரு காரணத்தால் விரக்தியாகி வெடித்துவிடுகின்றது.
வெறுப்பை எப்படியோ காட்ட எண்ணி துப்பாக்கி தூக்கிவிட்டு பாய்ந்துவிடுகின்றார்கள்
எப்படி துப்பாக்கி சரளாமக கிடைக்கின்றது?
அமெரிக்க வரலாறு அப்படியானது. குடியேற்றவாசிகள் ஆயுதம் ஏந்தித்தான் பிரிட்டனை விரட்டினர். அன்று எல்லோர் கையிலும் ஆயுதம் இருந்தது.
பின் சுதந்திர அமெரிக்காவில் ஒரு சட்டம் இயற்றினார்கள், அதாவது அரசு முறைதவரும் பட்சத்தில் மக்கள் ஆயுதம் ஏந்த வசதியாக மக்களிடம் ஆயுதம் இருக்கவேண்டும் என முடிவெடுத்தார்கள்
அந்த முடிவுதான் இன்றுவரை அமெரிக்கர்கள் துப்பாக்கி வைத்துகொள்ள வழிவகுக்கின்றது.
துப்பாக்கி வைத்திருப்பார்களே தவிர அரசுக்கு எதிராக எல்லாம் பயன்படுத்தமாட்டார்கள். நம் வீட்டு கத்தி போல அவர்களுக்கு துப்பாக்கி ஒரு ஆயுதம்
இப்பொழுதெல்லாம் அடிக்கடி இம்மாதிரி தாக்குதல் ஹோட்டல்களில் நடக்க போதை பழக்கமும், சிறுவர்கள் பள்ளியில் சுட்டுகொள்ள வீடியோ கேம்களும் காரணம் என்கின்றன செய்திகள்,
மக்கள் எந்நேரமும் ஆயுதம் ஏந்தி அரசை எதிர்க்கலாம் எனும் உயரிய நோக்கில் உருவாக்கபட்ட சட்டம் இன்று திசைமாறி செல்கின்றது என பல குரல்கள் எழும்பின
இப்பொழுது நிலமை எல்லை மீறி செல்கின்றது, இனி சட்டம் திருத்தபடலாம்
இப்படி ஒரு சட்டம் இந்தியாவில் இல்லை. இங்கு மட்டும் இருந்திருந்தால் என்றோ அங்கிள் சைமன் மொத்த இலங்கையினையும் பிடித்து, சிங்களன் எல்லோரையும் கடலில் வீசியிருப்பார்.
அதிமுக தினகரன் மட்டும் சும்மா இருந்திருப்பாரா என்ன? கிட்டதட்ட ஐந்தாயிரம் தோட்டாக்கள் அவருக்கு தேவைபடும்,
சிலரை எல்லாம் நூறுமுறை சுடுவார் மனிதர் அவ்வளவு வெறுப்பில் இருக்கின்றார்.