அமெரிக்காவுக்கு இது மாபெரும் தோல்வி

சில தந்திர நகர்வுகளும், அவற்றின் பின்னால் இருக்கும் திட்டமும் ஆச்சரியமானவை, இப்படி எல்லாம் கூட திட்டமிடுவார்களா என வியந்து சிலாகிக்க கூடியவை

அப்படி மாபெரும் ராஜதந்திரமான விஷயம் சிரியாவில் நடந்திருக்கின்றது, வாயே திறக்காமல் மிக ராஜதந்திரமாக மாபெரும் வெற்றிபெற்றிருக்கின்றது ரஷ்யா

உங்களுக்கு தெரியாததல்ல சிரியாவில் நடக்கும் குழப்பமும் அங்கு ஐ.எஸ் இயக்கத்தை அடக்க போகின்றேன் என அமெரிக்கா வந்து நங்கூரமிட்டதும் அதை தொடர்ந்து ரஷ்ய படைகள் வருகையும் நடந்தது

ஒருபக்கம் சிரியா ஈரான் ரஷ்யா கூட்டணியும் மறுபக்கம் அமெரிக்க குர்து கூட்டணியும் ஐ.எஸ் தனி பக்கமுமாகவும் சிரிய எதிர்ப்பு படைகள் அமெரிக்க கூட்டணியிலும் இருந்து ஒருமாதிரி சண்டையிட்டன‌

ஐ.எஸ் இயக்கம் இப்பொழுது சில நூறு பேராக சுருங்கிவிட்டது , அவர்கள் ஊதினாலே பறப்பார்கள் ஆனால் அமெரிக்கா செய்யவில்லை சிரியாவினையும் செய்யவிடவில்லை காரணம் ஐ.எஸ் முழுக்க அழிந்தால் அங்கு அமெரிக்கா நிற்க முடியாது

இந்நிலையில் சிரியாவினை விட்டு வெளியேறுகின்றோம் என சொல்லி படையினை குறைக்க தொடங்கியது அமெரிக்கா, ஆனால் கால் வைத்த இடத்தில் தன் ஷூ வைத்து அதற்கு சில காவலையும் வைப்பது அவர்கள் வழக்கம் என்ற வகையில் வடசிரியா அவர்கள் கட்டுபாட்டில் இருந்தது

இங்குதான் ரஷ்யா குறிவைத்தது, கொஞ்சநாளாக சிக்கலிலில் இருக்கும் அமெரிக்க துருக்கி மோதலை ரகசியமாக உசுப்பேற்றி சிரியாவில் குர்துகள் மேல் பாய சொன்னது

குர்துமேல் துருக்கி பாய , குர்துகளுக்கு அமெரிக்கா உதவாமல் கைவிட குர்துவும் சிரிய அரசும் இணைந்தன‌

இந்நிலையில்தான் சிரியாவில் “வடக்கே என்னப்பா சண்டை, சரி சரி இனி அடிக்கபுடாது சரியா. அண்ணன் வந்துட்டேன்,, அந்த அமெரிக்கா பய போகட்டும். நாம பாத்துக்கலாம்” என வந்துவிட்டது ரஷ்யா

ஆம் இனி வடசிரியாவில் ரஷ்யபடைகள் நிற்கும், துருக்கியும் சமாதானத்துக்கு வருகின்றது

ஆக என்ன நடந்திருக்கின்றது, துருக்கி சிரியா ரஷ்யா ஆகிய மூவரும் அட்டகாசமான நாடகம் ஆடி அமெரிக்காவினை அடித்து விரட்டியிருக்கின்றார்கள்

நீ அடிப்பது போல் அடி என துருக்கிக்கும், நீ அழுவது போல் அழு என சிரியாவுக்கும் கண்ணை காட்டிய ரஷ்யா சரியாக உள்ளே வந்தாயிற்று

அமெரிக்கா வெளியேறியதில் ரஷ்யாவுக்கும் சிரியாவுக்கும் மகிழ்ச்சி, குர்துகள் அடங்கியதில் துருக்கிக்கு மகிழ்ச்சி, ஈரானுக்கும் மகிழ்ச்சி, எல்லொரும் நலம்

இதில் துருக்கியின் எதிர்காலம் இனிதான் தெரியும்

ஐரோப்பிய யூனியன் மற்றும் நேட்டோ அமைப்பில் ஒரே இஸ்லாமிய நாடு துருக்கி, பலகாரணங்களுக்காக அதை அப்படி வைத்திருந்தார்கள், துருக்கிக்கு நவீன ஆயுதமும் பணமும் கிடைப்பதெல்லாம் அப்படியே

இனி காட்சிகள் மாறலாம் , ஆனால் துருக்கியின் எர்டோகன் ஒருமாதிரி ஆசாமி என்பதால் அசையமாட்டார்

இந்த விவகாரத்தால் இஸ்ரேல் கொஞ்சம் அப்செட், ஆனாலும் ரஷ்யா அருகே ஜார்ஜியா என்றொரு பெரும்பான்மை யூதர் வாழும் நாடு உண்டு, அங்கிருந்து அது ரஷ்யாவுக்கு குடைச்சல் கொடுக்கும், ரஷ்யா சிரிய எல்லையில் இருந்து ஹவ் ஆர் யூ என கேட்கும்

இதனால் இருவரும் ஒரு முடிவுக்கு வந்துவிடுவார்கள் மற்றபடி இந்த அரேபிய ஆட்டம் நடந்து கொண்டே தான் இருக்கும்..

இப்போதைக்கு சிரியாவில் இருந்து அமெரிக்காவினை விரட்டி அடித்து மாபெரும் சாதனை செய்து தன் கொடியினை பறக்கவிட்டிருகின்றது ரஷ்யா, நிச்சயம் அமெரிக்காவுக்கு இது மாபெரும் தோல்வி