அமெரிக்கா அழகாக படித்து, அரேபியாவில் செய்துவிட்டது
மேய்ப்பனை வெட்டு ஆடுகள் சிதறும் என்பது பைபிள் வசனம்
இதனை அமெரிக்கா அழகாக படித்து, அரேபியாவில் செய்துவிட்டது
ஆம், மிக நன்றாக கவனித்து ஈராக்கில் மட்டுமல்ல லெபனான், சிரியா , ஏமன் என எல்லா இடங்களிலும் அமைதிவரை அல்லது அமெரிக்க கை ஓங்கி ஈரானின் பலத்தை குறைக்க அந்த சுலைமானியினை கொன்றால் போதும் என கணித்தார்கள்
மிக துல்லியமாக சுலைமானியினை அவர்கள் ஒழித்துவிட இப்பொழுது ஷியா இயக்கங்கள் தவிக்கின்றன, சுலைமானியின் அனுபவமும் திறமையும் யாருக்கும் இல்லை அது வருவதும் சிரமமும்
இதனால் ஈரானின் ஆதரவு இயக்கங்கள் மேய்ப்பன் இல்லா ஆடுகளாக தவிக்கின்றன, அமெரிக்கா விரும்பியதும் இதுதான், ஈரான் புது மேய்ப்பனை தேடிகொண்டிருக்கின்றது
ஆனால் புது மேய்ப்பன் வருவதற்குள் ஆடுகளை அமெரிக்க ஓநாயும் இஸ்ரேலிய புலியும் விட்டுவைக்குமா என்ன?

சுலைமானிக்கு நாள் குறிக்கும்பொழுதே அடுத்தடுத்து யாரெல்லாம் மேலே அனுப்பட வேண்டும் என்ற பட்டியல் அமெரிக்காவிடம் இருந்திருக்கின்றது, வேகமாக டிக் அடிக்கின்றார்கள்
3ம் தேதி சுலைமானிக்கு டிக் அடித்தார்கள் அடுத்த 4 நாட்களில் இன்னொரு தளபதியின் பெயரை வெட்டினார்கள்
இப்பொழுது மூன்றாம் தளபதி பெயரையும் வெட்டியாயிற்று, காரணம் அந்த தளபதி நேற்று கொல்லபட்டுவிட்டார்
அவர் சுலைமானிக்கு நெருக்கமானவர், போராளிகளுக்கு பயிற்சி கொடுத்தவர் அவர்தான், பெயர் மொச்சடாமி
அவரை ஈரானில் வைத்தே தெருவில் சுட்டு கொன்றிருக்கின்றது எதிர் கோஷ்டி. இது மொசாட்டின் கைங்கர்யம் என்கின்றது ஈரான்
வழக்கம் போல மவுனமாக கள்ளசிரிப்பு சிரித்துவிட்டது நகர்கின்றது இஸ்ரேல்,
அடிக்கு மேல் அடியாக ஆனால் கவனமாக தனி நபர்களை மகா முக்கியமானவர்களை மட்டும் மேலே அனுப்பி ஈரானை குழப்பி தவிக்க வைத்து கொண்டிருக்கின்றது அமெரிக்க இஸ்ரேல் கூட்டணி.