அமெரிக்கா நிதானமாக ஈரானிய ஏவுகனை தாக்குதல் பற்றி செய்தி வெளியிடுகின்றது

அமெரிக்கா நிதானமாக ஈரானிய ஏவுகனை தாக்குதல் பற்றி செய்தி வெளியிடுகின்றது

நேற்று ஈராக்கும் ஈரானும் ஒருசேர அறிவித்த 35 ஏவுகனைகள் தாக்கி 80 பேர் செத்தது எல்லாம் உண்மை அல்ல‌

உண்மையில் தாக்குதல் நடக்க போவதை அமெரிக்கா முன்னறிந்து முகாமை காலி செய்திருக்கின்றது இதனால் ஈரானிய தாக்குதலில் யாரும் சாகவில்லை

ஈரான் ஏவியது 14 ஏவுகனைகள், அதில் 11 ஏவுகனைகள் இலக்கை தாக்கியிருக்கின்றன அதிலும் ஆபத்தான வெடிபொருள் இல்லை, சம்பிரதாய எச்சரிக்கையே

இன்னும் 3 விமான தளத்துக்கு வெளியே விழுந்திருகின்றது அதிலும் சேதம் விளைவிக்கும் வெடிபொருள் இல்லை, எச்சரிக்கைக்கு அனுப்பியது

விஷயம் சொல்வது இதுதான்

ஈரான் சுலைமானி கொலைக்கு ஏதாவது எச்சரிக்கை செய்யும் நிலைக்கு வந்தது, நாட்டு மக்களின் கோபம், ஷியா தீவிரவாதிகளின் கோபத்தை கட்டுபடுத்த அவர்களுக்கும் வேறுவழியில்லை

ஆனால் யுத்தம் தொடங்கவும் தயக்கம்

இதனால் எங்களால் முடியும் ஆனால் செய்யமாட்டோம் இதோ எச்சரிக்கை என அமெரிக்காவுக்கு சில விஷயங்களை சொல்லியிருக்கின்றார்கள்

அமெரிக்கா ஈரானின் விழுந்த ஏவுகனைகள் அருகே சம்மணம் போட்டு உட்கார்ந்து அருகில் டீ கோப்பையும் பிஸ்கட்டும் வைத்தபடி பாடல் ஒலிக்க அந்த ஏவுகனைகளை ஆய்வு செய்து கொண்டிருக்கின்றது

ஆம், ஈரானிடம் துல்லியமான ஏவுகனை பலம் இருக்கின்றது இதற்கு எம்மாதிரி எதிர்ப்பு தேவை என குறிப்பெடுக்கின்றது

ஈரானும் சாம்பிள் காட்டிவிட்டு அமைதியாய் இருக்கின்றது

இது கிட்டதட்ட ராமதாஸுக்கும் திருமாளவனுக்குமான அரசியல் போல ஆகிவிட்டது

ஆம் இருவருக்குமே சண்டையிட ஆசையில்லை, சண்டையிடுவதாக காட்டி அரசியல் செய்ய ஆசை

ஆனால் தொண்டர்களுக்கு மோதிவிட வெறி, மோதினால் இரு கட்சியுமே நாசமாகும் என்பது திருமாவுக்கும் தெரியும், ராமதாஸுக்கும் தெரியும்

ஆக திருமாவும் ராமதாஸும் தமிழ்நாட்டில் செய்வதை அகில உலகில் அமெரிக்காவும் ஈரானும் செய்துகொண்டிருக்கின்றன, அவ்வளவுதான் விஷயம்.