அமெரிக்கா மிகபெரும் இக்கட்டில் இருக்கின்றது.

கொரோனா விவகாரம் தன் வழக்கமான கொதிநிலையில் எரிமலையாய் பொங்கிகொண்டிருக்கின்றது, 9 லட்சத்தை தாண்டி சென்று, உயிரிழந்தோர் எண்ணிக்க்கையினை ஐம்பதாயிரமாக ஆக்க சிக்ஸர் அடித்து கொண்டிருக்கின்றது

ஒன்றும் சொல்வதற்கில்லை, ஐரோப்பா தன் உச்சகட்ட போராட்டத்தை நடத்துகின்றது. அமெரிக்காவில் 2.3 லட்சம் பேர் பாதிக்கபட்டு, பலி எண்ணிக்கை ஐந்தாயிரத்தை தாண்டிவிட்டது

ஐரோப்பியர் கண்ணீர் வற்றிவிட்டது, அவர்கள் கல்லறையும் நிரம்பிவிட்டது, இனி என்னமும் நடக்கட்டும் என்ற ஒருவித விரக்தியில் மூழ்குகின்றது ஐரோப்பா , அந்த சோகத்தில் தற்கொலை செய்வோர் எண்ணிக்கையும் அதிகம்

இந்தியாவில் டெல்லி கூட்டத்தால் சட்டென கிராப் அதிகரித்து இந்தியா 2 ஆயிரம் நோயாளிகளுடன் 20ம் இடத்துக்கு வந்தாயிற்று. இது எதிர்பார்த்தது என்றாலும் அதிகமே, கொஞ்சம் பதற்றம் அங்கு நிலவுகின்றது

மற்ற நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் வித்தியாசம் என்னவென்றால் இந்தியாவில் கிராமங்களுக்கும் அது வேகமாக பரவுவது ஆபத்து

இந்தியா இன்னும் சில நோயாளிகளை புதிதாக சேர்த்தால் பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளிவிடும், ஆம் வெறும் 50 நோயாளிகளே இப்பொழுது கூடுதல்

எனினும் இந்திய மக்கள் தொகைக்கு இது சாதாரணமே

மிக பெரும் போராட்டத்தை உலகம் முன்னெடுக்கின்றது இது இருவாரங்களில் தீரபோவது போல் தெரியவில்லை

அமெரிக்கா மிகபெரும் இக்கட்டில் இருக்கின்றது, அது அவர்கள் சிக்கல் என விட்டுவிட முடியாது, தங்களுக்கு பணம் தட்டுப்பாடு வரும்பொழுதெல்லாம் உலகில் மிகபெரும் போர்களை உருவாக்கி சம்பாதிப்பது அவர்கள் வழக்கம் என்பதால் அடுத்தால் எங்கு கொள்ளி வைக்க போகின்றார்களோ தெரியவில்லை

ஆனால் ஒரு விஷயம் உண்மை

மிகபெரும் பாதுகாப்பான தேசம், தொட்டுபார்க்க எவனுமில்லை என்ற மகோன்னத திமிரில் உலகெல்லாம் அமெரிக்காவால் கொல்லபட்ட மக்கள் கொஞ்சமல்ல, போர் கலவரம் குண்டுவெடிப்பு என செத்த 90% மக்களின் ரத்தகறை அமெரிக்க கைகளில் உண்டு

அந்த ரத்தம் கூக்குரலிட்டு பழிவாங்காமல் விட்டுவிடுமா?