அமெரிக்க அதிபர் டிரம்பினை இன்று சந்திக்கின்றார் இம்ரான்கான்

ஒருவிதமான இறுக்கமான சூழலில் அமெரிக்க அதிபர் டிரம்பினை இன்று சந்திக்கின்றார் இம்ரான்கான்.

பாகிஸ்தானுக்கு சொந்தமான அரசு விமானத்தில் செல்லாமல் கத்தார் ஏர்வேஸில் சாதாரண பயணிபோல் சென்றிருகின்றார் இம்ரான்கான், அவ்வளவு பொருளாதார சிக்கலாம்.

நொடிந்திருக்கும் பாகிஸ்தானிய பொருளாதாரம், சீனபிடி, அமெரிக்கா நிறுத்திவிட்ட நிதியுதவி என பாகிஸ்தான் சிக்கி தவிக்கும் நேரம் இந்த சந்திப்பு பல கோணங்களில் பார்க்கபடுகின்றது

பாகிஸ்தான் பிரதமர் அமெரிக்காவிடமும் உலகவங்கியிடமும் கடன் வாங்க போகின்றாரா? என சில கேள்விகள்

அமெரிக்காவுடனான இந்த சந்திப்பு சீனாவுக்கு எப்படி இருக்கும்? கொஞ்சம் பின்னடைவினை சீனா சந்தித்திருக்கும் வேளையில் அமெரிக்காவுடன் பாகிஸ்தான் இணையுமா என்பது போன்ற சில கேள்விகள்

என்ன இருந்தாலும் ஈரானை ஒருவேளை அமெரிக்கா தாக்கும் பட்சத்தில் பாகிஸ்தானின் ஆதரவு வேண்டும். பாகி
ஸ்தான் கடற்பரப்பு, பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க முகாம், இது போக ஆப்கானில் இருக்கும் முகாமுக்கான சப்ளை என விஷயம் இருக்க, பாகிஸ்தானை பகைத்துவிட்டு அமெரிக்கா ஈரானை தாக்கிவிட முடியாது

அடுத்து வரும் கோணம்தான் நம் நாட்டு கோணம்

ரஷ்யாவில் இருந்து எஸ் 400 வாங்குவது, சூ 57 வாங்குவது என இந்தியா உறுதியாய் இருக்கும் நேரம் பல வகை மிரட்டல்களை விடுகின்றது அமெரிக்கா

பொருளாதார தடையினை வீசுவோம் என்பது வரை கடும் மிரட்டல்கள்

இந்தியாவினை மிரட்டும் வகையில் பாகிஸ்தானுடன் அமெரிக்கா ஏதும் திட்டம் வைத்திருக்கின்றதா என்பதும் இன்னொரு கோணம்

இந்தியாவினை மிரட்ட பாகிஸ்தானை எப்பொழுதெல்லாம் கையில் எடுக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் மகா முக்கியமான செயல்திட்டங்களில் ஒன்று..

2015க்கு பின் பாகிஸ்தான் பிரதமர் அமெரிக்க அதிபரை தனியாக சந்திக்க செல்வது இதுவே முதல்முறை என்பதால் ஏதோ விஷயம் இருக்கின்றது