அமெரிக்க காந்தி

என்னதான் கிறிஸ்தவம் சமத்துவம் என பேசினாலும், அந்த கிறிஸ்தவ மேல்மட்டம் கத்தோலிக்கம் மற்றும் பிரிவினை என பலவாறு பிரிந்து சீர்திருத்தம் செய்தாலும் கிறிஸ்த்தவம் வெறும் அரசியல் அது ஒரு மதம் அல்ல என்பதும், கிறிஸ்தவ பெயரால் செய்யபடுவதெல்லாம் ஆட்சி, சம்பாத்தியம் மற்றபடி சமத்துவம் அங்கு இல்லை என்பதும் ஐரோப்பியரின் இனவெறியால் அறியபடும்

ஐரோப்பியருக்கு 15ம் நூற்றாண்டில் இருந்துதான் அந்த அரைபயித்தியம் பிடிக்க ஆரம்பித்தது என்றல்ல, ஐரோப்பா தவிர ஏதும் அறியாமல் உள்ளே சண்டையிட்டுகொண்டிருந்த கூட்டம் வறுமையில் இருந்த கூட்டம் உலக நாடுகளுடன் வியாபாரம் செய்யவந்தபொழுது அதிர்ஷ்டவசமாக அல்லது நரிதந்திரமாக அல்லது வாழவேண்டிய பேராசையில் உலகை சுரண்டியபொழுது தாங்களே உயர்வானவர்கள் மற்றவர்கள் மட்டமானவர்கள் என கருத தொடங்கினார்கள்

செல்வம் குவிய குவிய இது கூடிற்று

இயேசு என்பவரையும் அவர் போதனைகளையும் தங்களின் மத அடையாளமாக மட்டும் கொண்டு பின் வாழ்வியலில் அதனைமுழுக்க அகற்றினர்

அடிமை வியாபாரம் முதல் கருப்பர் மேலான வெறுப்பு அதாவது ஐரோப்பியர் அல்லாத எல்லோர் மேலும் ஒரு இழிவான மட்டமான பார்வை பார்ப்பது அவர்கள் வழமையாயிற்று

மதத்தால் அன்பு நிறை கிறிஸ்தவர் என்றாலும் உணர்வால் அவர்கள் அன்பற்ற காட்டுமிராண்டிகளே, மனிதனை மனிதன் விற்பதும் வாங்குவதும், சக மனிதனை ஆடுமாடு போல நடத்துவதும் அவர்கள் இயல்பாயிற்று

“உன்னை போல உன் அயலானையும் நேசி” என சொன்ன இயேசுவினை எப்பொழுதோ குழிதோண்டி புதைத்துவிட்டு பணம் ஒன்றே பிராதனம், மாய கவுரவம் ஒன்றே பிரதானம் என வாழ தொடங்கினார்கள்

இதற்கு கத்தோலிக்க போப்பும் தப்பவில்லை அவரை எதிர்த்த சீரமைப்பு கூட்டமும் தப்பவில்லை, மனிதனை மதிக்காத, மனிதனை அடிமைபடுத்தும் ஒரு சமூகமாகவே இருந்தார்கள்.

அவர்களின் மேலோட்டமான ஆன்மீகமும், அடிதளமில்லா போதனையும் அதற்கு வலுசேர்த்தன‌

வெள்ளையன் அமெரிக்காவினை அடைந்த காலத்தில் இருந்தே அது வெள்ளையருக்கு மட்டும் சொந்தமான நாடு என்ற எண்ணம் அவர்களிடை வந்தது

செவ்விந்தியர் மூர்க்கமாக அழிக்கபட்டனர், ஆப்ரிக்காவில் இருந்து கருப்பர்கள் அடிமைகளாக கொண்டுசெல்லபட்டு சொல்லணா துயருற்றனர், அமெரிக்க விடுதலைக்கு பின்னும் அது 100 ஆண்டு தொடர்ந்தது

மாமனிதன் ஆபிரஹாம் லிங்கன் அவர்கள் அடிமை இல்லை அவர்களும் நம் மக்கள் என அறிவித்தார், அதனால் கொல்லவும் பட்டார்

அன்றே உள்நாட்டு போரால் அமெரிக்க உடைந்திருக்க வேண்டியநிலையில் இருந்தது, அதனை எல்லாம் காத்து இன்று ஒரே அமெரிக்காவாக இருக்க காரணம் லிங்கனே , ஆனாலும் இனவெறி அவரை கொன்றது

அதன் பின்னும் அவர்களுக்கு உரிமைகள் இல்லை, வாக்குரிமை கூட இல்லை

ஆம் இந்தியாவுக்கு பிரிட்டிசார் அதை செய்தார் இதை செய்தான் என சொல்பவரெல்லாம் அமெரிக்காவில் நெடுங்காலம் கருப்பர்களுக்கு வாக்குரிமையே இல்லை என்பதை சொல்லமாட்டான்

அமெரிக்க ஜனநாயகம் இப்படித்தான் தொடங்கிற்று

வெள்ளையன் அதிகார வர்க்கம் , ஆயுத போராட்டம் வெற்றிபெறா நிலையில் தவித்து நின்றனர் கருப்பர்கள்

அவர்களுக்கு கிடைத்த மாமணிதான் மார்ட்டின் லுத்தர் கிங். அவர் ஒரு பாதிரி ஆனால் சிந்திக்க தெரிந்த பாதிரி

நாமெல்லாம் கிறிஸ்தவர்கள் என்கின்றீர்கள், ஆனால் எங்களை ஒதுக்கியே வைத்திருக்கின்றீர்கள். சக மனிதனை மனிதனாக கூட மதிக்காத நீங்கள் எப்படி உன்னத கிறிஸ்தவராக முடியும் என பகிரங்க கேள்விகளை எழுப்பினார்

அப்பொழுது அவர் பெயர் மைக்கேல் கிங், ஐரோப்பாவில் போப்பினை எதிர்த்து புரட்சி செய்த மார்ட்டின் லுத்தர் பெயரை இவர் தனக்கு சூட்டிகொண்டு போராடினார்

ஆனாலும் பலனில்லை, இந்த உலகில் யாரின் வழி அமைதியான ஆனால் வலுவான போராட்ட வழி என அவர் தேடியபொழுது ஒன்றும் கிட்டவில்லை

அமைதி வழி என் வழி என போராடினார், அப்பொழுது அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது

அக்கால அமெரிக்க பேருந்தில் வெள்ளையர்களே அமர வேண்டும், கருப்பர் அமர்ந்தால் வெள்ளையர் வந்ததும் எழுந்துவிட வேண்டும், இது தொடர்பாக ஒரு கருப்பு பெண்ணை வெள்ளையர் அறைந்துவிட மோதல் வெடித்தது

அடிபடுவது ஒன்றும் கருப்பருக்கு புதிதல்ல, ஆனால் மார்ட்டின் லுத்தர் காந்தி வழியில் எதிர்ப்பு தெரிவித்தார். போக்குவரத்து கழக கருப்பர்கள் இச்சிக்கல் தீரும்வரை பணிக்கு வரமாட்டார்கள்

போராட்டம் பரவ அமெரிக்கா ஸ்தம்பித்தது

விஷயம் விவகாரமாகி வேறுவழியின்றி கருப்பர் கோரிக்கை ஏற்கபட்டு கருப்பர்கள் பேருந்தில் அமரலாம் என முடிவாயிற்று, கருப்பர்களுக்கு கிடைத்த முதல் வெற்றி இதுதான்

இந்த உற்சாகத்தில் போராட ஆரம்பித்தார் மார்ட்டின் லூத்தர், எனக்கொரு கனவு உண்டு, இதே அமெரிக்காவில் கருப்பர்கள் சம உரிமை பெற்று வாழவேண்டும், நாமும் மனிதர்களே என அவர் உருகி கேட்டது உலக மக்கள் இதயத்தை எல்லாம் உசுப்பியது

உலகின் கவனத்தை பெற்றார் மார்ட்டின் லுத்தர், சர்வதேச ஆதரவு பெருகியது. அமெரிக்க வெள்ளையரோ அவரை மிரட்டினர்

“இந்த போராட்டத்தில் இறங்கும்பொழுதே எனக்கு சாவு நிச்சயம் என தெரியும், ஆபிரகாம் லிங்கனையே இனவெறிக்கு கொன்ற தேசம் என்னை எப்படி விடும்?”என அமைதியாக சொன்னார் மார்ட்டின் லுத்தர்

1959ல் இந்தியா வந்தார், பல இடங்களை சுற்றி பார்த்தபின் திரும்பினார், இந்திய மக்களின் சுதந்திர போராட்ட வழியில் நடக்க நடைபோட்டார்

அதற்கு காந்தி வழியினை தேர்ந்தெடுத்ததாகவ்ம் சொன்னார்

கவனிக்கவும், மார்ட்டின் லுத்தர் தனி நாடு கோரவில்லை அமெரிக்காவில் தம் மக்களுக்கு உரிமை மட்டும் கோரினார், தனிநாடு உருவாக்காமல் மக்கள் உரிமையுடன் வாழ காந்தி கொள்கைச் அரியானது எனவும் கண்டார்

அதாவது ஒரு இனம் இன்னொரு இனத்திடம் இருந்து முழு விடுதலைபெற்று சுதந்திரம் பெற காந்திவழி உதவாது, ஆனால் அதிகார மாற்றம் இல்லாமல் சில உரிமைகளை பெற காந்திவழி உதவும்

அதிகாரமாற்றம் வேண்டாம் சில உரிமை போதும், சுதந்திர சுயராஜ்யம் வேண்டாம் சில உரிமைகள் போதும் என சமரசம் கொள்ள காந்தி கொள்கையினை விட அருமையான கொள்கை இல்லை என்பதை உணர்ந்தார்

அவ்வழியில் ஒன்றுபட்ட அமெரிக்காவில் சில உரிமையோடு அவர்கள் வாழ காந்தி வழிகாட்டினார்

1964ல் நோபல் பரிசும் அவருக்கு கிடைத்தது, காந்திய கொள்கை பெற்றுகொடுத்த நோபல் அது.

தொடர்ந்து போராடினார், மக்களை நாடெங்கும் திரட்டி கொண்டே இருந்தார், கருப்பர்கள் அவரை தேவ தூதனாகவே கண்டார்கள்

பொறுக்காத இனவெறி வெள்ளையன் 1968ல் அவரை சுட்டு கொன்றான். லிங்கன் வரிசையில் மானிடத்திற்காய் மக்களை நேசித்த பாவத்திற்காய் அவன் செத்தபொழுது வயது வெறும் 39

உலகம் அவனுக்காய் அழுதது, உலகெங்கும் உரிமை குரல்கள் எழும்பின குறிப்பாக தென்னாப்ரிக்கா போன்ற நாடுகள் அமைதி வழியில் உரிமை பெறுவது முடியும் என நம்பின, மண்டேலா போன்றோர் உருவானார்கள்

அமெரிக்காவிலும் கருப்பர்களுக்கு உரிமைகள் கிடைக்க தொடங்கின, முகமது அலி மைக்கேல் ஜாக்சன் போன்றோர் வெளி தெரிந்தது அங்கீகாரம் பெற்றது லுத்தரின் சாவுக்கு பின்னாலேதான்

அந்த லுத்தர் கொடுத்த சக்தியில்தான் அமெரிக்க வரலாற்றில் முதல் கருப்பு அதிபராக ஒபாமா பின்னாளில் வந்தார்

நிச்சயம் 1950கூட அடுத்த 50 ஆண்டுகளில் கருப்பர் அமெரிக்காவினை ஆள்வார் என யாரும் நம்பி இருக்க முடியாது அவ்வளவு கொடுமையான காலங்கள்

ஆனால் அஹிம்சையான போராட்டம் மாபெரும் திருப்பத்தை கொடுத்தது

மிக சிறிய வயதிலே போராட வந்து, 39 வயதிற்குள் சாதித்துவிட்டு அம்மக்களுக்காக செத்த அந்த மார்ட்டின் லுத்தர் இந்த உலகில் விட்டு சென்ற அடையாளம் வலுவானது, கருப்பர்களை அடையாளபடுத்தி உரிமை கொடுத்த அவதாரமாகவே அவர் பார்க்கபடுகின்றார்

அவருக்கு வழிகாட்டியது காந்தி, அதாவது அதிகாரம் யாரிடமும் இருக்கட்டும் நமக்கு சில உரிமை போதும் என சொன்ன காந்தி

காந்தியின் கொள்கைகள் எப்படியானது என‌ காந்திக்கு பின் கண்டது அவரில்தான்

அந்த மாமனிதனுக்கு இன்று நினைவுநாள், ஒடுக்கபட்ட மக்களுக்காக போராடுகின்றோம் என சொல்லிகொள்பவர் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய மகான் அந்த லுத்தர் கிங்

ஒடுக்கபட்டோருக்கான தலைவன் எப்படி இருக்க வேண்டும், எப்படி தொலைநோக்கோடு சிந்திக்க வேண்டும் என சொன்னவர் அவர், அப்படி நல்ல தலைவன் பின் சென்றால் அமைதியான வளமான நாட்டை உருவாக்க பங்களிப்பினை செய்ய முடியும் என செய்துகாட்டியவர்கள் அமெரிக்க கருப்பர்கள்

இன்று அந்நாடு உச்சத்தில் இருக்கின்றது,

உரிமைக்காக துப்பாக்கி தூக்கிய தேசங்கள் அழிந்து கிடக்கின்றது அதுவும் பக்கத்து தீவே சாட்சி

நிச்சயம் லுத்தர் பிரிவினை பேசவில்லை, எங்களை தனியாக விடு என கத்தவில்லை மாறாக எங்களுக்கும் உரிமை கொடுங்கள் நாங்களும் இந்நாட்டிற்கு பாடுபடுகின்றோம் என்றுதான் முழங்கினான் உயிர்விட்டான்

அப்படிபட்ட தலைவர்களே இன்று உலகெங்கிலும் உள்ள ஒடுக்கபட்டோருக்கு தேவை, குறிப்பாக இந்தியாவில் நான் தலித் தலைவன், போராளி, இனமான போராளி என சொல்லிகொள்பவர்கள் நல்லவர்களாக இருந்தால் அவர்கள் நோக்கம் உன்னதமாக இருந்தால் மார்ட்டின் லுத்தரை பின்பற்ற தயங்கமாட்டார்கள்

ஆனால் எங்காவது நீங்கள் இந்த கும்பல்களிடம் லுத்தர் படம் பார்க்கமுடியுமா?

கார்ல் மார்க்ஸ், ஏங்கல்ஸ், சே என பல வெளிநாட்டு தலைவர்கள் இருக்கும் படத்தில் நிச்சயம் லுத்தர் படமும் இருக்க வேண்டும் ஆனால் வைக்கமாட்டார்கள்

ஏனென்றால் அவன் உரிமை கோரியவன் ஆனால் அமெரிக்க அபிமானி, இவர்களோ இந்திய எதிர்ப்பு எனும் ஒற்றை புள்ளியில் சுழல்பவர்கள் அதனால் லுத்தர் இவர்களுக்கு தேவையில்லை

“எனக்கொரு கனவுண்டு..” என அவன் முழங்கியதில் பாதி நடந்திருக்கின்றது, முழுவும் நனவாக இன்னொரு முறை அவன் பிறந்து வரவேண்டும்

வரலாற்றில் மிகபெரும் தடம் பதித்த அந்த அமெரிக்க காந்திக்கு இன்று பிறந்த நாள், ஆழ்ந்த அஞ்சலிகள்..