பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

காளிதாசனின் ரகுவம்சம் : 76-80

காளிதாசனின் ரகுவம்சம் : 76 அந்தத் தேவநீகனுக்கு அஹிகு என்றொரு மகன் பிறந்தான், அவன் தன் இனிய மொழியாலும் நடத்தையாலும் தன்னை சார்ந்தோரை மட்டுமல்லாமல் எதிரிகளையும் வசமாக்கினான். அஞ்சி ஓடும் இயல்புடைய மான்களும் இனிய மொழிக்கும் இசைக்கும் மயங்கி அருகே வருவது போல அவன் தன் இனிமையான சொற்களால் பகைவரையும் வளைத்து நல்லாட்சி செய்தான். அஹீகு எனும் அந்த அரசன் குறையாத தோள்வலிமை உடையவன், இளம்வயது ஆயினும் அவன் கீழோருடன் நட்பு கொண்டிருக்கவில்லை. அதனால் குடி சூது […]

காளிதாசனின் ரகுவம்சம் : 71-75

காளிதாசனின் ரகுவம்சம் : 71 அப்பெண்கள் உடுத்தியுள்ள மெல்லிய வஸ்திரங்கள் நீரால் நனைந்ததால் அவை அவர்களின் இடையோரம் ஒட்டிக்கொண்டன, அந்த ஆடையின் மேகலையில் இருந்த‌ நீர்ப்பட்ட முத்துக்கள் சந்திரன் முன் நட்சத்திரம்போல் மங்கியிருந்தன, நூல்களில் கோர்க்கப்பட்ட அவைகளின் துவாரங்களில் நீர் இருந்ததால் அவைகள் எழுப்பும் ஒலியும் மங்கியிருந்தது. கோடைக்காலத்தின் விளையாட்டாக அப்பெண்கள் நீரினை அடித்து விளையாட அவர்கள் முகத்தில் நீர் படிகின்றது, அது அப்பெண்களின் முன்நெற்றி முடியினைச் சுருக்கங்கள் நீக்கி நீண்டதாக்குகின்றது, அந்த முடியின் வழி வழியும் […]

காளிதாசனின் ரகுவம்சம் : 66-70

காளிதாசனின் ரகுவம்சம் : 66 ராமன் அஸ்வமேத யாகம் செய்ய ஆரம்பித்தபோது விபீஷ்ணன் சுக்ரீவன் உள்ளிட்ட எல்லா அரசர்களும் மேகம் பயிர்கள் மேல் மழை பொழிவது போல் ஏராளமான பொருட்களைக் காணிக்கையாய் ராமனுக்குக் கொட்டினார்கள். ராமனின் அழைப்பினை ஏற்று அந்த யாகத்துக்குப பூலோக முனிவர்களும் ரிஷிகளும் மட்டுமன்றி தேவலோக ரிஷியான மரீசி முதலான ரிஷிகளும் வந்திருந்தார்கள். முனிவர்களெல்லாம் அயோத்தி நகரின் வெளியே தங்கியிருந்தார்கள், அந்த அயோத்தி நகரின் நான்கு வாயில்களிலும் அப்படித் தேவலோக ரிஷிகள் குவிந்து கிடக்க […]

காளிதாசனின் ரகுவம்சம் : 61-65

காளிதாசனின் ரகுவம்சம் : 61 தான் எப்போதும் உண்மையினை மறைக்காமல் பேசுவது போல் மற்றவரும் உண்மையினை மறைக்காமல் தன்னிடம் பேசவேண்டும் என எதிர்பார்ப்பவன் என்பதால் அந்த உளவுக்காரன் உள்ளதைச் சொன்னான். “அரசே, ராட்சசனின் மாளிகையில் சில காலம் இருந்த சீதையினை நீங்கள் ஏற்றுக்கொண்டு அயோத்திக்கு அழைத்து வந்ததை தவிர எல்லா வகையிலும் மக்கள் உங்களைக் கொண்டாடுகின்றார்கள்” என்றான். தன் அன்புக்குரிய மனைவியான சீதையினைப் பற்றி எழுந்த இந்த அபகீர்த்தியானது பழுக்கக் காய்ச்சப்பட்ட இரும்பினைச் சம்மட்டி அடித்து உடைப்பதைப் […]

காளிதாசனின் ரகுவம்சம் : 56-60

காளிதாசனின் ரகுவம்சம் : 56 ராமன் தொடர்கின்றான். “ஓ அச்சம் கொண்டவளான சீதையே, உன்னை அந்த அரக்கன் உன்னைத் தூக்கிச் சென்ற வழியினை இந்தச் செடி கொடிகளால் வாயால் சொல்லமுடியவில்லை. அதனால் அவன் ஒடித்துப்போட்ட கிளைகள் எனும் அதன் கைகளை தளிர்கள் எனும் அதன் விரல்களைத் தொங்கவிட்டபடி அவை எமக்கு நீ சென்ற வழியினைச் சொன்னது. என் துயரைக் கண்ட இளம் மான்கள் அவை விரும்பும் இளம் புற்களைக் கூட உண்ணாமல் மேல் நோக்கிய (வானம் நோக்கிய) […]

காளிதாசனின் ரகுவம்சம் : 51-55

காளிதாசனின் ரகுவம்சம் : 51 முற்றிய காமம் மூளையினைச் சிதைக்கும் என்பதுபோல காளை போன்ற ராமன் மேல் பெரும் ஆசை கொண்ட சூர்ப்பனகை தன் விருப்பத்தைதா தெரிவித்தாள், சீதை எனும் பெண் அங்கே இருந்தபோதும் அவளைத் தாண்டி தன் ஆசையினை வெளிப்படுத்தினாள், மலர் வாசமற்றது போனது போல அந்தச் சூர்ப்பனகை நாணமற்றுப் போனாள். அழகிய தோற்றமுடைய ராமன் தன்மேல் பெரும் ஆசை கொண்ட சூர்ப்பனகையினை நோக்கிப் “பெண்ணே, நான் மனைவியுடன் இங்கே இருக்கின்றேன் க்ஷ, நீ தனித்திருக்கும் […]

காளிதாசனின் ரகுவம்சம் : 31 to 35

காளிதாசனின் ரகுவம்சம் : 31 அஜன் தன் நல்லாட்சியினைத் தொடர்ந்தான், அவன் ஆண்மையுடன் ஆளும் பூமி எனும் பெண்ணும் இந்துமதியும் அவன் மேல் கொண்ட அன்பின் அடையாளமாக தன்னிடமுள்ள எல்லாமும் கொடுத்தார்கள். பூமிபெண் அவனுக்குத் தன்னிடம் உருவான எல்லாவற்றையும் சிறந்து கொடுத்தாள். அப்படியே இந்துமதியும் அழகான ஆண்மகவினை அவனுக்குப் பெற்றுக் கொடுத்தாள். ஆயிரம் கரங்களைக் கொண்ட சூரியனுக்குப பிரகாசம் உடையவனும், பத்து திசைகளிலும் பெரும் புகழ் பெறப்போகும் மகனை தசரதன் எனப் பெற்றாள் இந்துமதி, அவனே பின்னாளில் […]

காளிதாசனின் ரகுவம்சம் : 16 to 20

காளிதாசனின் ரகுவம்சம் : 16 ரகுவுக்கு எல்லாப் பலமும் இருந்தது. அந்தப் பலத்தினை சரத்காலம் முடிந்த பருவம் இன்னும் பலமாக்கியது, மழைக்காலம் முடிந்ததால் ஆறுகள் கர்ப்பமான யானைகளின் வயிறு குட்டி ஈன்றதும் வற்றியதைப் போல் வற்றியது, அந்த ஆழம் சுருங்கிய ஆறுகளைக் கடப்பதும், தேங்கிய சேறு நிறைந்த இடம் உலர்ந்துபோனதால் படைநடத்துவதும் அவனுக்கு எளிதானது. இதனால் படை நடத்தி திக் விஜயம் செல்ல விரும்பிய ரகு அதற்கான யாகமான வாஜிநிராஜனம் எனும் யாகத்தைச் செய்தான். அப்போது யாக […]

காளிதாசனின் சாகுந்தலம் – 09

காளிதாசனின் சாகுந்தலம் : 09 அங்கே நதிக்கரையில் தோழியருடன் நடுவில் படுத்திருந்தாள் சாகுந்தலை, அவள் அருகே அமர்ந்தபடி விரிந்த மலரைப் போன்ற விசிறியினை கொண்டு காற்று வீசினார்கள் தோழியர். காவியத்தின் கனிச்சாறாய் அங்கு அவள் படுத்திருக்க‌, முறம் போன்ற தாமரை இலைகளை வைத்து அவளுக்கு சாம்ரம் வீசிகொண்டிருந்தனர் தோழியர் இருவர். “என்ன செய்கின்றீர்கள்?” என புரியாமல் கேட்டாள் சாகுந்தலை, “இந்த குளிர்காற்றாவது உன் வெம்மையினை போக்குமா என பார்க்கின்றோம்” என சொல்லி மெல்ல கொண்டார்கள் தொழியர். மறைந்திருந்து […]

முருகப்பெருமான் ஆலயங்கள் : மச்சக்கார முருகன் ஆலயம் மற்றும் நடுபழனி ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : மச்சக்கார முருகன் ஆலயம் மற்றும் நடுபழனி ஆலயம். சென்னை வானகரத்தில் அமைந்திருக்கின்றது மச்சக்கார முருகன் ஆலயம், போரூர் தொழில்பேட்டைக்கு அருகில் வானகர மேட்டுப்பக்கம் இது அமைந்திருக்கின்றது. இந்த ஆலயத்தின் துவக்கம் முருகப்பெருமானின் அவதார காலத்தில், அதாவது வள்ளி திருமணத்தில் இருந்து துவங்குகின்றது. வள்ளியினைத் திருமணம் செய்ய வந்த முருகன் அவள்மேல் காதல் கொண்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேடத்தில் வந்து கொண்டிருந்தான். அவன் முதியவர் வேடத்தில் வருவான், வேடன் வேடத்தில் வருவான், இன்னும் […]