அம்பேத்கர் இட ஒதுக்கீட்டில் படித்தவர் அல்ல
அம்பேத்கர் இட ஒதுக்கீட்டில் படித்தவர் அல்ல மாறாக பரடோ மன்னர் கொடுத்த தனி ஒதுக்கீட்டில் படித்து வந்தவர், அம்மன்னன் புதுகோட்டை மன்னன் போல இருந்திருக்கின்றான்
அம்பேத்கர் இந்நாட்டின் சட்ட அமைப்புக்கும் ரிசர்வ் வங்கி அமைப்புக்கும் அஸ்திவாரம் சந்தேகமில்லை, ஆனால் இட ஒதுக்கீடு என அவர் கோரும் பொழுது இது எவ்வளவு காலத்துக்கு? இனி எக்காலமும் அவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்து கொண்டே இருக்க சொல்கின்றீர்களா? என்ற கேள்வி எழுந்தது
இல்லை இல்லை 3 தலைமுறைக்கு பின் இது மாற்றபட வேண்டும் இல்லாவிட்டால் குழப்பம் மிஞ்சும் என அன்றே சொன்னார் அம்பேத்கர்
சரி இட ஒதுக்கீடு வந்தாயிற்று, தன்னை போல ஒரு தலித் படித்து வந்து தன் இடத்தை நிரப்புவானா என எதிர்பார்த்தே இருந்தார் அம்பேத்கர்
ஒரு பயலும் அப்படி உருவாகவில்லை மாறாக அவர் படத்தை பிடித்து அரசியல் செய்ய தொடங்கினர், அந்த துயரத்தில் அப்படியே பெரும் கோஷ்டியுடன் புத்தமதம் சென்றார் அம்பேத்கர்
அந்த பெரும் கோஷ்டி புத்தமதம் இன்று என்னாயிற்று என தெரியவில்லை, ஆக அவரை மட்டும் விட்டுவிட்டு மற்றவர்கள் தாய்மதம் திரும்பியிருப்பார் போல
ஏதோ இட ஒதுக்கீட்டால் பூரா பயலும் அம்பேத்கராகி மன்மோகன் சிங்குக்கும் ராம் ஜெத்மலானிக்கும் சவால்விட்டு கொண்டிருப்பது போல அழிச்சாட்டியம்
இட ஒதுக்கீடு கொடுத்து இத்தனை வருடமாகிவிட்டது, எத்தனை தலித் மருத்துமனை, விஞ்ஞானி , முன்னணி மீடியா, முன்னணி தொழிலதிபர்கள் வந்திருக்கின்றார்கள் என தேடினால் யாருமில்லை
மாறாக அரசியல் கூட்டம் மட்டும் பெருகியிருக்கின்றது. அம்பேத்கர் விரும்பியது அது அல்ல