அய்யர்கள் பிஸி
நடப்பது நாட்டுக்கான தேர்தல், இந்த நாடு அடுத்த 5 ஆண்டு எப்படி ஆளபட போகின்றது என்பதை நிர்ணயிக்கும் மகா முக்கிய தேர்தல்
இந்த தேர்தலில் தமிழ்நாட்டின் சந்து பொந்தில் நின்று கொன்டு திராவிடம், பகுத்தறிவு இன்னபிற விஷயங்களை பேசுவது சரியல்ல, அதெல்லாம் மாநில விவகாரம்
தேசத்திற்கு எது தேவையோ அதை இம்மாநிலம் செய்யட்டும்
ஒருவிஷயம் கவனிக்கின்றோம்
இந்த தேர்தலில் யார் பிசி என்றால் அய்யர்கள், தேர்தல் கமிஷனை விட அவர்கள்தான் பிசி
எல்லா அரசியல்வாதியும் அவர்களிடம் கைகுலுக்குகின்றார்கள் ஆசிவாங்குகின்றார்கள்
ஆலயம் சென்று ம்ம் பரிவட்டம் கட்டுங்கள் சுவாமி, கும்பம் கொடுங்கள் சுவாமி என குனிந்து நிற்கின்றனர்
பகுத்தறிவு பகலவனின் வாரிசுகள் ஆலயம் வரமாட்டோம் ஆனால் சாமி கும்பத்தோடு சமூகமாக என்னை வந்து பார்க்குமா? என வாசலில் நிற்கின்றார்கள்
யாகம் வளர்க்காத வேட்பாளர் மிக குறைவு, தன் குலதெய்வ கோவிலில் அய்யரோடு போஸ் கொடுக்கும் வேட்பாளர்கள் எண்ணிக்கை 95% தாண்டுகின்றது
தெய்வத்தை மனமார நம்பும் வேட்பாளர்கள் அதிகரித்துவிட்டனர், மக்கள் துணையோடு தெய்வ துணையும் வேண்டும் என அவர்கள் வந்து வணங்குகின்றனர்
தான் ஆன்மீகவாதி என அறிவிக்கபடாமல் சல்லி வோட்டு வாங்கமுடியாது என்பது அவர்களுக்கு நன்றாக புரிந்துவிட்டது
தமிழகம் “பெரியார் மண்” என எவனாவது சொல்வானாகில் சிரிப்புத்தான் வருகின்றது
தமிழகம் தன் இயல்பான கலாச்சாரமான பழைய நிலைக்கு திரும்புகின்றது
இனி எல்லாம் சுபமே..