“அய்யா வீரமணி உண்டு” என்ற அளவுக்கு மாறிவிட்டார்கள்

“அய்யா உண்டு” என அந்த சாமிதோப்பு ஆதீனம் சொல்லிகொண்டிருந்ததன் பொருள் இவ்வளவு நாளும், அய்யா வைகுண்டர் உண்டு என்பதாக அறியபட்டது

இப்பொழுது “அய்யா வீரமணி உண்டு” என்ற அளவுக்கு மாறிவிட்டார்கள்

இதன் உள்ளே இருக்கும் விஷயம் சற்று நோக்கதக்கது

விஷயம் வேறொன்றுமில்லை, குமரி மாவட்டம் திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தபொழுது நாடார் இனத்துக்கு மேலாடை அணியும் உரிமை மற்றும் தலப்பாகை அணியும் உரிமை இன்னபிற உரிமைகளை வாங்கி கொடுத்தது அய்யா வைகுண்டர்

அதில் இருந்தே இந்த சாமிதோப்பு பதி மகா பிரபல்யமும் செல்வாக்கும் கொண்டது

திருச்செந்தூர் முதல் சுசீந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த மடத்துக்கு செல்வாக்கு அதிகம்

அந்த மடம் சாமாயம் அல்ல, ஒரு காலத்தில் போப்பாண்டவருக்கு கடிவாளம் போட்ட துருக்கிய
ஆட்டோமானியர் போல, கன்னியாகுமரி பக்கம் மதமாற்றம் நிகழ்வதை இந்த மடமே கடிவாளமிட்டு கட்டுபடுத்தியது

இந்த அய்யா வைகுண்டன் என்பவர் நம் மதமாற்றத்தை தடுத்துவிட்டான் என கிருஸ்தவ மிஷினரிகள் 18ம் நூற்றாண்டில் ஐரோப்பாவுக்கு கடிதம் எழுதும் அளவு அது வல்லமையாய் இருந்தது

இந்துக்களின் காவல் அது

அந்த பலத்தில்தான் தமிழ்நாட்டிலே முதன் முதலில் பாஜக அங்கு காலூன்றியது

இப்பொழுது அந்த மடம் விலையோயிற்று, கன்னியாகுமரி தொகுதியினை காங்கிரஸ் குறிவைத்து நடத்தும் காரியங்கள் இவை

காங்கிரஸ், திமுக, திக கூட்டு சதியில் ஆதீனம் வசமாக சிக்கி வீரமணியினை அழைக்கின்றது

சாமிதோப்பு பதி அய்யா வழி நாடார்களின் தலையிடம் , அய்யாவழி நாடார்களின் சொத்து தூத்துகுடி , நாகர்கோவில் என பல இடங்களில் பரந்து கிடக்கின்றது

தூத்துகுடியும் கன்னியாகுமரியும் இந்த காங்கிரஸ் திமுக எனும் இந்துஎதிர்ப்பு அமைப்புகளிடம் சிக்கியுள்ள நிலையில், சாமிதோப்பு மடாதிபதியே வீரமணியிடம் சிக்கவைக்கபட்டுள்ளார்

இது மிகுந்த சர்ச்சையினை சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது

சாமிதோப்பில் வீரமணி கால்வைக்கும் பட்சத்தில் அப்பதி தன் தனிதன்மையினை இழக்கும்

அது இழக்கும்பட்சத்தில் மதமாற்றமும் இன்னும் பலமாற்றங்களும் நடக்கும்

18ம் நூற்றாண்டில் எந்த வைகுண்டர் மதமாற்றத்தை தடுத்தாரோ அவரின் காவல் உடைக்கபட்டு ஜெகத்கஸ்பர் கோஷ்டிகள் இப்பொழுது ஆட நினைக்கும்

இது கன்னியாகுமரி தூத்துகுடி இந்துக்களின் எழுச்சியினை பொறுத்து பாஜகவுக்கு அனுகூலமாகவும் அமையலாம்

இல்லையேல் இந்துக்களுக்கு மிக பெரும் அச்சுறுத்தலாகவும் அமையலாம்

சொல்வதை சொல்லிவிட்டோம், பாலபிரஜாபதி அடிகளார் கடவுள் இல்லை என சொல்லும், ராமனையும் முருகனையும் செருப்பால் அடித்ததாக பெருமைபடும் வீரமணியினை அழைப்பது, சாமிதோப்புக்கு விஷம் ஊற்றும் செயல்

அடிகளார் தன் நிலைபாட்டை மாற்றாவிட்டால் நடக்கபோகும் விபரீதங்களுக்கும், அந்த புனிதமான மகான் வைகுண்டரின் பெரும் சாபத்துக்கும் பொறுப்பு என வரலாறு குறித்துகொள்ளும்