அரசியலிலும் கால்பந்து போல நொடியில் அதிசயம் நிகழலாம்
மகராஷ்ட்ராவில் நடக்கும் காட்சிகள் அதிசயம் என நினைத்தால் உங்களுக்கு அரசியல் அவ்வளவு தெரியவில்லை என பொருள் , அரசியலிலும் கால்பந்து போல நொடியில் அதிசயம் நிகழலாம்
தேர்தல் முடிவு ஒரு இரையினை போட்டு சிங்கம் 3 நரிகளை சுற்றி வைத்துவிட்டு சென்றுவிட்டது, சிங்கம் அந்த இரை தனக்கே என்றும் தனக்கு இல்லாவிட்டால் யாருக்குமில்லை மாறாக அதை எப்படி உண்பது என்பது எனக்கு தெரியும் என கர்ஜித்து நின்றது
3 நரிகளுளும் சிங்கத்தை எதிர்த்து தங்களுக்குள் என்ன ஆதாயம் என சிந்தித்ததே தவிர வேறு ஒன்றும் சிந்திக்க வழியில்லை
இதில் ஒரு நரி ரகசியமாக சிங்கம் பக்கம் ஓடிவிட்டது, வெளியே நடிக்கின்றதே தவிர உள்ளே எல்லாம் நரியின் ஆசீர்வாதத்துடனே நடக்கின்றது
ஆம் பாஜகவினை எதிர்த்துவிட்டு மகராஷ்ட்ர அரசு சாத்தியமில்லை., ஜனாதிபதி ஆட்சி அல்லது மறுதேர்தல் எனபதே சாத்தியம், இரண்டும் பாஜகவுக்கு அனுகூலமான விஷயமே
இந்த நேரத்தில் காங்கிரஸ் அரசியல் எனும் பெயரில் விவேகமில்லா காரியம் செய்கின்றது, அவர்களுக்கு சிவசேனை மற்றும் பாஜக எதிர்கள்
ஆனால் சரத்பவார் துரோகி, மகராஷ்டிரத்தில் பவார் காங்கிரசுக்கு பெரும் அச்சுறுத்தல் அவர்தான் எதிரி
எதிரி குழம்பி திசைமாறி திரியும்பொழுது அவரை குறிவைத்து அடித்து நொறுக்கி மக்களிடம் இருந்து அகற்றவேண்டுமே தவிர பாஜகவினை குறிவைப்பது அல்ல
பாஜகவினை காங்கிரசால் அசைக்க முடியாது ஆனால் சந்தர்பத்தை பவார் மேல் அடித்து அவரை ஓரங்கட்டலாம்
ஆனால் விவேகமில்லா காங்கிரஸ் பாஜகவினை எதிர்த்து என்னவோ செய்கின்றது, காங்கிரஸ் ஏன் உருப்படாமல் போகின்றது என்பது இப்படித்தான்