அரசியல் அழிச்சாட்டியங்கள்

பகல் கனவை ராகுல் நிறுத்த வேண்டும்: பாஜக தலைவர் அமித் ஷா

ஆம் அந்த கனவை காண தமிழிசைக்கு மட்டுமே உரிமை உண்டு, தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்

[ September 28, 2018 ]


மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தர் நியமிக்கப்பட்டது செல்லும்: உயர்நீதிமன்றம்

சும்மாவே நித்தி ஒரு மந்தகாச புன்னகையோடு இருப்பார்,தீர்ப்பினை கேட்டு எப்படி சிரிப்பாரோ?

எல்லாம் அந்த சிவபெருமானை சொல்லவேண்டும் அவர்தான் அந்த ஆதீனத்து கனவில் வந்து நித்தியினை வாரிசாக‌ நியமிக்க சொன்னாராம்

[ September 28, 2018 ]


இந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்லாம் பாலசந்தர் படங்களை அதிகம் பார்த்து தொலைத்தார்களா? இல்லை கமலஹாசன் ரசிகர்களா என்பது மகா குழப்பமாக இருக்கின்றது

இந்த இரு வகையறாக்களில் ஒன்றில் அவர்கள் இல்லாமல் இப்படியான தீர்ப்புகள் வராது

சமீபத்தில் ஓரின சேர்க்கை குற்றமல்ல என்றார்கள், இப்பொழுது எல்லா உறவும் குற்றமே அல்ல என்கின்றார்கள்

எமக்கென்னமோ பாலசந்தர் படங்களை அதிகம் இவர்கள் பார்த்திருப்பார்கள் என்றே தோன்றுகின்றது…

ஒருவேளை நித்திசாமி ஆதரவாளர்களாகவும் இருக்கலாம், என்கின்றது இன்னொரு தரப்பு, அதற்கும் வாய்பிருக்கின்றது

[ September 28, 2018 ]


தகாத உறவு குற்றம் அல்ல – உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.

“அட, முன்னாடி மட்டும் தண்டனைக்குரிய குற்றமாகவா இருந்தது???. எனக்கு தெரியாம போச்சே..”

[ September 28, 2018 ]
Image may contain: 1 person, closeup
—————————————————————————————————————————————-

பெண்கள் ஒடுக்கபடுகின்றார்கள், சில கட்சிகள் கூட பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை ஆதரிக்கவில்லை : கனிமொழி

அண்ணனிடம் பேசமுடியாததை , கட்சி பொதுகுழுவில் பேசமுடியாததை எல்லாம் அம்மணி மறைமுகமாக கொட்டி தீர்க்கின்றது பாவம்.

[ September 28, 2018 ]

============================================================================

“உச்சநீதிமன்றம் தகாத உறவை இனி தகும் என்பதால் அது தகுந்தது என்றல்ல, முன்பு தாகத உறவு இங்கு தகுந்து இருந்தது என இல்லாமலுமல்ல‌

தாகத உறவு இனி தகுமெனில் தகுந்த உறவு என்னாகுமோ, தாகததோ தகுந்ததோ எல்லாம் கடந்தவன் நான். அன்றே தகாதது தகுந்ததென்றேன் அது தகாது என்றார்கள், இன்று தகாதது தகும் என்றால் அன்றே தகுந்தவன் நான்”

[ September 28, 2018 ]
Image may contain: 1 person, sitting
=======================================================================

ரன்வீர் ஷா என்பவர் வீட்டில் 82 சிலைகள் மீட்கபட்டிருக்கின்றன என்பது சாதாரண விஷயம் அல்ல‌

சிலைகடத்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கபட்டாலும் , கடத்துபவர்கள் கடத்திகொண்டேதான் இருக்கின்றர்கள் எனும் பெரும் அதிர்ச்சியூட்டும் செய்தி இது

சட்டம், ஒழுங்கு, அறநிலையதுறை என எல்லாவற்றையும் கேள்வி கேட்கும் காட்சி இது

இன்னும் எத்தனை ரன்வீர் ஷாக்கள் எத்தனை சிலையினை மறைத்து வைத்திருக்கின்றார்களோ தெரியவில்லை, மிக அவசரமாக செயல்பட்டு எல்லா சிலையினையும் மீட்க வேண்டிய நேரமிது

மிக சரியாக நூல்பிடித்து சிலைகளை மீட்ட பொன்மாணிக்கவேலுக்கு பாராட்டுக்கள்

என்ன நாடு இது? சில தொழிலதிபர்கள் நாட்டை விட்டு ஓடுகின்றார்கள், சில தொழிலதிபர்கள் சிலைகளை நாட்டை விட்டு விரட்டுகின்றார்கள்

தொழிலதிபர்கள் என்றால் இந்த நாட்டில் மிக கவனமாக இருக்க வேண்டும் போல..  [ September 28, 2018 ]

============================================================================

உணவுக்கும் நீருக்கும் அடுத்த அவசியமானது மருந்து, எப்பொழுது யாருக்கு அது பயன்படும் என்றே தெரியாது, சமூகத்தில் மிக முக்கியமான பொறுப்பு மருந்து கடைகளுக்கு உண்டு

உயிர்காக்கும் மாபெரும் கடமையினை செய்பவை அவை

ஆனால் தங்களின் பொறுப்பினை மறந்து பெரும் தவறான காரியத்தை செய்கின்றார்கள்,அதாவது ஆன் லைனில் மருந்து விற்பதை கண்டித்து இன்று கடை அடைக்கின்றார்களாம்

இது எப்படி இருக்கின்றது என்றால், தனியார் பாதுகாப்பு காவலர்கள் அமைப்பதை கண்டித்து காவல்துறையினர் வேலை நிறுத்தம் செய்வது போல் உள்ளது

தனியார்கள் செக்கியூரிட்டிகளை நியமிக்க கூடாது, நாங்களே எல்லோருக்கும் காவல் என காவல்துறை வேலை நிறுத்தம் செய்தால் என்னாகும்?

இவர்கள்தான் மருந்துகளை விற்க போகின்றோம் என அரசிடம் அனுமதிபெற்று மருந்து கடைகளை திறந்திருக்கின்றார்கள்

இப்பொழுது இவர்கள்தான் அரசை கண்டித்து ஆர்பாட்டமும் செய்கின்றார்களாம்

மருந்து என்பது அத்திவாசியமானது, அதை அவசியமாக தேவைபடுபவர்கள் எங்கும் வாங்கலாம்

இதை கண்டித்து அரசை எதிர்த்து மக்களுக்கு மருந்து கொடுக்கமாட்டோம் என்பதெல்லாம் அயோக்கியதனமும் சுயநலமும் மிக்க விஷயம்

உயிர்கொல்லும் மதுபான வியாபாரத்தை அரசே நடத்திவிட்டு உயிர்காக்கும் மருந்து விற்பனையினை தனியாரிடம் கொடுத்திருக்கும் மாநிலத்தில்

ஆற்றுமண்ணை அரசு விற்றுவிட்டு உயிர்காக்கும் மருத்துவத்தை தனியாரிடம் கொடுக்கும் இம்மாதிரி விஷயங்கள் நடப்பதை பார்த்து பரிதாபடத்தான் முடியும்

[ September 28, 2018 ]

============================================================================

“தப்பு பண்ணிட்டோம் அமித்து, இந்த இந்தியா பாகிஸ்தான் ஆட்டத்திற்கு இங்கே அனுமதி கொடுத்திருக்க வேண்டும்

நாம என்னமோ நினைச்சி அனுமதி கொடுக்கல, பாகிஸ்தானை துபாய்ல போட்டு இந்திய அணி அடிச்சிருக்கு, குனிய வச்சி குத்திருக்கு

இதுவே இந்தியாவில் நடந்திருந்தால் ரபேலாவது, ஜீபேலாவது. அடுத்தவாட்டி நல்லா யோசிக்கணும் அமித்து.

நல்ல வாய்ப்பை விட்டுட்டோம்..”

Image may contain: 2 people, beard
===========================================================================

சபரிமலை கோவிலுக்குள் பெண்களுக்கு அனுமதி – உச்சநீதிமன்றம்

தீர்ப்பு சொல்லிவிட்டால் மட்டும் நல்ல இந்துபெண்மணிகள் செல்ல போகின்றார்களா என்ன? நிச்சயம் மாட்டார்கள்

மக்களின் தலைமுறை தலைமுறையான நம்பிக்கை என்பதை சட்டம் போட்டு உடைக்க முடியாது. [ September 28, 2018 ]

===========================================================================