சீன அரசு ஒரு விஷயத்தில்
சீன அரசு ஒரு விஷயத்தில் வசமாக சிக்கிவிட்டது
அது சிக்கிவிட்டதெல்லாம் அமெரிக்காவிடமோ ரஷ்யாவிடமோ அல்ல மாறாக தன் சொந்த மக்களிடையே சிக்கிவிட்டதுதான் சோகம்
சீனாவின் பொருளாதாரம் ஆடிகிடக்கும் நேரம், அந்நாட்டில் பெரும் தொழில்முடக்கம் டிரம்ப் கால் தடைகள் கொரோனா கால குழப்பம் அதுபோல சீன அரசின் தவறான நடவடிக்கைகளால் ஏற்பட்ட குழறுபடி என பல சிக்கல்களில் மக்களின் கவனத்தை திருப்ப சில அதிரடி விவகாரங்களை சீனா எழுப்பும்
அதில் ஒன்றுதான் தைவான்
தைவானுக்கும் சீனாவுக்கும் முரண்பாடு என்னவென்றால் இந்தியருக்கு புரியும்படி சொல்லவேண்டும் என்றால் சீனாவின் மனப்பான்மையில் காஷ்மீர் இந்தியாவுக்கு என்பது போல தைவான் எங்களுக்கு என்பது
அதையே தைவானியர் மனப்பான்மையில் சொல்வதாக இருந்தால் இலங்கையர் நிலையில் சொல்லலாம், இந்தியா வேறு நாங்கள் வேறு
தைவான் சீனாவின் அன்மித்த தீவு அது சீனபுரட்சி காலத்திற்கு முன்பே தனி நாடு தனி கலாச்சாரம் என்றுதான் இருந்தது, மொழி ஒன்று என்றாலும் தாவோயிசம் எனும் மதம் வேறு இதர சிக்கல்கள் வேறு என அதன் சிக்கல் நீண்டது
சீனபுரட்சி ஏற்பட்ட 1950களிலே தைவானை தொட மாவோவுக்கு ஒரு அச்சம் இருந்தது, அது தீரா சிக்கலுக்கு வழிவகுக்கும் என பின்னாளைக்கு ஒத்திவைத்தார்
காரணம் இரண்டாம் உலகப்போரில் பசிபிக் கடலுக்குவந்த அமெரிக்கா ஜப்பான் தென் கொரியா என தன் கால்களை வலுவாக ஊன்றிய நிலையில் இன்னொரு போரை தொடங்க சீனா விரும்பவில்லை
இதனாலே திபெத் வரை பிடித்த மாவோ தைவானை தொடவில்லை
கம்யூனிச நாடு, பெரும் மக்கள் சக்தி கொண்ட நாடு எனும் வகையில் மேற்கத்திய நாடுகளுக்கும் சீனாவுக்கு ஒரு அங்குசம் வேண்டும் எனும் எண்ணம் இருந்தது, உரிய வாய்ப்பாக தைவான் இருந்தது
ஹாங்காங் பிரிட்டனிடம் இருந்து ஒருநாள் சீனாவுக்கு செல்லும் என உறுதியாக தெரிந்ததால் அடுத்த ஹாங்காங்காக அதே நேரம் சீனாவுக்கு நிரந்தர தலைவலி கொடுக்கும் விதமாக தைவானை வளர்த்தது அமெரிக்கா
1975ல் அமெரிக்காவோடு புது உறவை ஏற்படுத்திய மாவோவுக்கும் பின் அதை தொடர்ந்த டென் ஜியோ பிங்குக்கும் இதை தடுக்கும் சக்தி இல்லை
இந்த வாய்ப்பில் தைவானுக்கு தன் நவீன விமானம்முதல் பெரும் பொருளாதார உதவி வரை செய்து வளர்த்தது அமெரிக்கா
இன்று நான்சி சென்றிருக்கலாம் ஆனால் முன்பு யார் யாரெல்லாமோ சென்றார்கள், ஏன் தைவான் பிரதமரே அமெரிக்கா சென்ற காட்சி எல்லாம் உண்டு
இப்படி தைவான் அமெரிக்காவுக்கு ஒரு ஆயுதமாக மாற அதை வைத்தே தன் மக்களை மயக்க பாகிஸ்தானுக்கு காஷ்மீர் போல சீனாவுக்கு தைவான் ஆனது
இப்பொழுது கொஞ்சம் சோர்வில் அப்படியே ஆட்சியின் மேல் அதிருப்தியில் இருக்கும் மக்களை மடைமாற்ற போர்முரசினை கொட்ட ஆரம்பித்தது கம்யூனிஸ்ட் அரசு
இது கம்யூனிஸ்டுகளின் வழமையான தந்திரம், மக்கள் அரசுமேல் அதிருப்தி கொண்டால் எங்காவது போரிட்டு அல்லது போர்முரசு கொட்டி கவனத்தை திருப்பும் தந்திரம், சோவியத் இதை பல இடங்களில் செய்தது, வடகொரியாவுக்கு வேலையே அதுதான்
அப்படி சீனா இப்பொழுது தைவான் என கடுமையாக கத்திற்று
சீன ராணுவம், சீன வெளியுறவுதுறை என ஆளாளுக்கு இம்முறை சாடினார்கள், நான்சி வந்தால் எந்த எல்லையும் தாண்டுவோம் என சவால்விட்டார்கள்
இதனால் சீன மக்களுக்கு தங்கள்நாடு நிச்சயம் போர்புரியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது, போர்போர் என சீற ஆரம்பித்தார்கள்
குஷியான சீன அரசு “நெருப்போடு விளையாடும் எதிரிகள் பொசுங்குவார்கள்” என்றது ஆனால் எதிரி யார் என சொல்லவே இல்லை
மக்கள் உற்சாகமானார்கள்
இன்னும் சீன முரசொலி குளோபல் டைம்ஸ் சீன எல்லையில் வந்தால் நான்சி விமானம் சுட்டுவீழ்த்தபடுமெ என பகிரங்கமாக எச்சரிக்க நிலமை சீன மக்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பானது
இதனால் பெரும் எதிர்பார்ப்பு உலகெல்லாம் இருந்தது, எந்த அளவுக்கு என்றால் நான்சியின் விமானம் எந்தவழி செல்கின்றது என விமான பயண ஆப்ஸ்களை மில்லியன் கணக்கான மக்கள் பார்க்கும் அளவு நிலமை பரபரப்பாயிற்று
சீனாவில் இம்மாதிரி ஆப்ஸ்க்கு அனுமதி இல்லை என்பதால் அவர்கள் தங்கள் வலைதளமான வெய்போவில் மக்கள் பொங்கினார்கள், இதர சமூக சீன ஊடகங்களிலும் மக்கள் போர்முரசு கொட்டி எதிர்பார்த்தார்கள்
சீனாவி டிவிட்டர் முகநூலுக்கு அனுமதி இல்லை என்பதால் அவர்களின் சொந்த தளம்தான் உண்டு
இப்படி மக்கள் சீன எல்லைக்குள் நான்சி வந்தால் அவர் விமானம் வீழ்த்தபடும், அமெரிக்க கப்பல் உடைக்கபடும், சீன கொடி உயர பறக்கபடும் என காத்திருந்தனர்
நான்சி விமானம் சீன எல்லை அருகே வந்துவிட்டபொழுது அவர் தைவானுக்கு வந்து கொண்டிருப்பது தெரிந்தபொழுது சீனா அரசு வழமை போல அமைதியானது
அவர்களின் சமூகவலைதளம் செயலிழந்தது இதர தொடர்புகள் செயலிழந்தன, மக்களுக்கு குழப்பம் வந்தது
நான்சி விமானம் சீன ஏவுகனைகள் பார்த்து கொண்டிருக்க அதற்கு “ஹாய்” சொல்லிவிட்டு தைவானில் இறங்கிற்ற்று
உண்மையில் சீனாவால் அந்த விமானத்தை ஏவுகனை வீசி தகர்க்கமுடியுமா என்றால் அங்கேதான் இருக்கின்றது விஷயம்
அப்படி ஒரு அரசால் செய்யமுடியாது செய்தால் மிகபெரிய சிக்கலை அந்நாடு எதிர்கொள்ளும், பெரும் தடையும் குழப்பமும் உருவாகும்
அமெரிக்கா முன்பு ஈரானிய தளபதி சுலைமானியினை ஈராக்கில் கொன்றது போல் சீனாவால் செய்யமுடியாது, செய்தால் சீனா மீளாது
இன்னொன்று அமெரிக்க ராஜதந்திரிகளின் விமானம் எந்த ஏவுகனையும் தாக்கமுடியா பாதுகாப்பு கொண்டவை , சீனா எந்த கனை ஏவினாலும் அது விமானத்தை தாக்கமுடியாது அதன் பாதுகாப்பு அப்படி விமானம் தானாக தப்பிக்கும் பொறிமுறை கொண்டது
இது போக சுமார் 40 செயற்கைகோள்கள் 2 விமானம் தாங்கி கப்பல்கள் , இன்னும் அமெரிக்க விமானங்கள் கடலுக்கடியில் எண்ணிக்கை தெரியா நீர்மூழ்கிகள் என சூழ வந்த நான்சி விமானத்தை தொட்டுபார்க்கமுடியாது என சீனாவுக்கும் தெரியும்
இதனால் சோஷியல் மீடியாக்களை ஆப் செய்துவிட்டு அவர்கள் போக்கில் டீ குடிக்க சென்றுவிட்டார்கள், நான்சி ஒரு நாள்முழுக்க தைவானில் இருக்கும் பொழுதும் “வந்துட்டார்ல சரி போகட்டும்” என அவர்கள் போக்கில் நூடுல்ஸ் சாப்பிட்டு கொண்டிருந்தார்கள்
அவ்வளவுதான் அவர்களால் முடியும்
இது வழக்கமான விளையாட்டு என சீன அரசு நினைத்தால் மக்கள் போர்முரசு கொட்ட தொடங்கிவிட்டார்கள், சீன அரசு தைவானை கைபற்ற வேண்டும் போரை தொடங்கவேண்டும் என ஆளாளுக்கு கத்தி இது பெரும் குழப்பமாகிவிட்டது
“அடேய் போர் என்றால் சும்மாவா? அதெல்லாம் முடியாது” என சொல்லமுடியாமல் தவிக்கும் சீன அரசு , இது தங்கள் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் வெளிநாட்டு சதியோ என அமர்ந்திருக்கின்றது
ஆக அனுமார் வாலில் வைத்த தீ போல் ஆகிவிட்டது சீன நிலமை, சீன மக்களோ அரசுக்கு தைரியமில்லை திராணியில்லை தெம்பில்லை இது தேசிய அவமானம் என பொங்கிகொண்டிருக்கின்றார்கள்
நிலமையினை சமாளிக்க போர் பயிற்சி என 11 ஏவுகனைகள கடலை நோக்கி ஏவி கடல்வாழ் மீன்களிடம் வீரத்தை காட்டிகொண்டிருக்கின்றது சீனா
“அரசே, நம் எதிரிகள் தைவான் மீன்கள் அல்ல, தைவான் அரசு” என மக்கள் சொன்னாலும் கடல் மீன்களையே குறிவைக்கின்றது சீனா
குழப்பம் கூடிகொண்டிருகின்றது எதையாவது செய்தாக வேண்டிய கட்டாயத்தில் ஆனால் செய்யவே முடியாமல் தலையினை பிய்த்து கொண்டிருக்கின்றது அந்நாட்டு கம்யூனிஸ்ட் அரசு
சரி, அந்த தமாஷ் பேர்வழி குளோபல் டைம்ஸ் என்னாயிற்று?
அவர்களை காணவே இல்லை, ஏதும் தமஷாக எழுதிகொண்டிருப்பார்கள் சொல்லமுடியாது, தைவான் வெறும் கொசு அமெரிக்காவினை அடித்தால் தைவான் தானாக வீழும் இதனால் நம் குறி அமெரிக்கா அதனால் நியூயார்க்கையும் வாஷிங்டன்னையும் இனி விடமாட்டோம் என எழுதிகொண்டிருந்தாலும் ஆச்சரியமில்லை
அமெரிக்காவும் விளக்கம் கொடுத்துத்தான் பார்க்கின்றது
“டேய் தைவான்க்கு எப் 16 விமானம் நாங்கதான கொடுத்தோம்
அதெல்லாம் 20 வருஷம் முன்னாடி
தைவான் பிரதமர் கூட நியூயார்க் வந்தாரே?
அது சிலவருஷம் முன்னாடி
அமெரிக்க ராஜதந்திரிகள் கூட தைவான் வந்தார்களே
அது போன மாசம்
அப்பவெல்லாம் ஏண்டா சத்தமில்ல
யோவ், விடுய்யா உன்ன பார்க்க பாவமா இருக்கு, இதுவர என்ன யாரும் தொட்டதில்ல..”