அரசு முறை பயணமாக, நான்கு நாடுகளுக்கு கிளம்பினார் மோடி

இந்தியாவில் 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு: உலக சுகாதார அமைப்பு உறுதி செய்தது

இதற்கு பயந்துதான் மோடி வெளிநாட்டிற்கு ஓடினாரோ?

அது என்ன ஜிகா வைரஸ்? அதனை விட பயங்கரமான பெயர் தெரியாத‌ வைரஸ்கள் பாதித்தவன் எல்லாம் இந்தியாவில்தான் இருக்கின்றான்

பலர் பேசும் பேச்சுக்களில் அப்படித்தான் தெரிகின்றது, அதில் சிலர் தமிழக அமைச்சர்களாக கூட இருக்கலாம்


அரசு முறை பயணமாக, நான்கு நாடுகளுக்கு கிளம்பினார் மோடி

இம்முறை மோடி வெளிநாடு செல்ல பழனிச்சாமியும், பன்னீருமே காரணமாக இருக்கலாம், ஒருவர் மாற்றி ஒருவர் சென்று அழுதுகொண்டிருந்தால் மோடியும்தான் என்ன செய்வார்?

அதுவும் இனி மாட்டு பிரச்சினை அவரை தூங்க விடாது..

கிளம்பிவிட்டார், அதுவும் சும்மா செல்லவில்லை

என் 3 ஆண்டுகால‌ ஆட்சியினை பற்றி விமர்சனம் வருகின்றது, அடுத்த இரு வருடத்தில் அதனை சரிசெய்ய அவகாசம் இருக்கின்றது என சொல்லிவிட்டு சென்றிருக்கின்றார்

இனி அந்த 2 ஆண்டுகால ஆட்சியில் நடக்கும் தவறுகளை சரிசெய்ய அடுத்த ஐந்து ஆண்டுகாலம் கேட்பாரோ?