அர்ச்சனை தொடங்கியாயிற்று
சொந்த ஊர்காரன் தொலைவில் இருந்தால் ஏதோ ஊர்பாசத்தில் அவர்களை முகநூலில் இணைப்பது சொந்த செலவில் ஆப்ரிக்க சூனியம் வைத்து, அதற்கு மேலும் விஷம் குடித்து, அதற்கு மேலும் நம்மை நாமே சிலுவையில் அறைவதற்கு சமம்
சும்மாவே அரைகுறையாக தாயின் காதுக்கு தெரிந்திருந்த விஷயத்தை மனிதர் அட்டகாசமாக பற்ற வைத்திருகின்றார்
“எப்போ பாத்தாலும் எழுதிட்டே இருக்கியாம், வேலையே செய்றதில்லையாம், அப்பா அப்பவே சொன்னாரு நீ எழுதி உருப்படாம போக போறேன்னு…அத தான் உன் பொண்டாட்டியும் சொன்னா, இனி உன் பையன் சொல்றதுக்குள்ளயாவது திருந்து..” என அர்ச்சனை தொடங்கியாயிற்று
கிட்டதட்ட பல வருடங்கள் காத்திருந்து பழி தீர்த்துவிட்டார் Benitto Kumar என்பவர், மனிதர் அமித்ஷாவினை விட மோசமான ஆளாக இருப்பார் போலிருகின்றது
இந்த மும்பைவாசிகளே இப்படித்தான் நம்ப கூடாத ரகம் போலிருக்கின்றது….