அறிவாலயத்துக்கு தெரிவியுங்கள்

70 ஆண்டுகால அரசியல் கொண்டது திமுக, அதில் அண்ணாவு கலைஞரும் ஒருநாளும் சில இடங்களுக்கு சென்றதில்லை

பசும்பொன் தேவர் சமாதியும் , இம்மானுவேல் சமாதியும் அதில் சில‌

கோவில்களுக்கு செல்வதை தவிர்ப்பது போலவே அதை கவனமாக தவிர்த்தார்கள், தேவர் அஞ்சலிக்கு சென்றால் நாம் பாட்டாளி போராளிகள் என்பது தவறாகிவிடும் என்பதல்ல தேவர் தேசியம் மற்றும் இந்துமத அடையாளம் என்பது கணக்கு

இம்மானுவேல் சேகரன் சமாதிக்கும் செல்லவில்லை, சென்றால் அது ஒருபக்கம் அதிருப்தியினை உண்டாக்கும் என்பதும் கணக்கு

திராவிட கட்சிகளில் இதை முதலில் உடைத்தவர் ஜெயா, அவருக்கு அந்த சமுதாய வாக்கு முக்கியம் மற்ற வாக்குகள் வந்தால் நல்லது எனும் கணக்கு இருந்தது

அதிமுக கோவில், கொடை, ஜாதி என திரிந்துவிட்ட கட்சி அது செல்லாவிட்டால்தான் ஆச்சரியம்

ஆனால் திமுக இதுகாலம் சென்றதில்லை

முதல்முறையாக இரு இடங்களுக்கும் சென்றிருக்கின்றார் ஸ்டாலின் ஆக திமுக அதிமுகவாக மாறிவிட்டது

இன்னொரு பக்கம் சொல்வதாக இருந்தால் அண்ணாவும் கலைஞரும் தங்களை நம்பினர், ஆனால் ஸ்டாலின் ஜாதிகளை நம்ப ஆரம்பித்துவிட்டார் அவர்மேல் அவருக்கே நம்பிக்கை இல்லை

அடுத்து திமுக தலமை செல்லுமிடம் காடுவெட்டி குரு சமாதியாக இருக்கலாம்

அப்படியே நெல்லை பக்கம் கட்டதுரை சமாதியில் ஒரு அஞ்சலி கராத்தே செல்வின் சமாதியில் ஒரு வீரவணக்கம்

தொடர்ந்து வெங்கடேச பண்ணையார் சமாதியில் கண்ணீர் அஞ்சலி அப்படியே பசுபதி பாண்டியன் சமாதியில் சாதிமறுப்பு உறுதிமொழி என திமுக தலைவரின் பகுத்தறிவு ஜாதி ஒழிப்பு பயணம் தொடரலாம்

உங்களுக்கு தெரிந்த சாதி தலைவர் சமாதி இருந்தால் உடனே அறிவாலயத்துக்கு தெரிவியுங்கள் , அஞ்சலி செலுத்த தலைவர் நிச்சயம் வருவார்