அறிவாலயம் பக்கம் போயிருடா

அடேய் ஜூனியர் விகடனில் என்ன செய்தி வந்திருக்கின்றது பார்த்தாயா? துர்கா ஸ்டாலின் கட்சியினை கட்டுபடுத்துகின்றாராம் என்றவுடன் கொதித்துவிட்டான் அறை நண்பன்

அண்ணாச்சி இதெல்லாம் மற்ற பெண்கள் செய்தால் சேவை, அண்ணியார் செய்தால் அதிகாரமா? வரலாறை படியும் அண்ணாச்சி, என்னதான் படிச்சி கிழிச்சியரோ

அட அப்படி என்னடா அண்ணியார் பெருமை, சொல் பார்க்கலாம்

அண்ணாச்சி நல்ல மனைவி கணவனின் எல்லா காரியத்திலும் பங்கு பெறுவாள், அவதான் அண்ணாச்சி நல்ல மனைவி

அப்படியா?

காந்திக்கு கஸ்தூரி பாய், நேருவுக்கு கமலா நேரு, சாஸ்திரிக்கு லலிதா சாஸ்திரி அப்படி தளபதிக்கு துர்கா ஸ்டாலின் அண்ணாச்சி

டேய் அவங்களும் இவங்களும் ஒரே வரிசையா?

இதுதான் ஆர்.எஸ்.எஸ் புத்தி அண்ணாச்சி, பிரமணன் பொண்டாட்டின்னா தியாகி, ஆனா சூத்திரன் இயக்க தலைவர் பொண்டாட்டி செய்தா அதிகாரம். உமரு சங்கி சகவாசம் அப்படி ஆயிட்டு

அய்யயோ இல்லடா ராசா , மேல சொல்லு

அண்ணாச்சி, துர்கா ஸ்டாலின் என்ன செய்யுது? வீட்டில் சமையல பார்க்குது, தங்க தளபதிக்கு நல்ல சாப்பாடு கொடுத்து மருந்து கொடுத்து கவனிக்குது, வீட்டுக்கு போற கட்சிக்காரங்களுக்கு காபி டீன்னு கொடுத்து வரவேற்குது, வீட்டில வேலைகாரங்க கூட கிடையாது அவ்வளவு எளிமை அண்ணாச்சி

அப்படியே திமுக கட்சியினையும் கவனிக்குதுன்னு சொல்லு

அண்ணாச்சி அது என்ன அறிவாலயம் போகுதா? அறிக்கை விடுதா , அதுபாட்டுக்கு கோவில் குளம்னு அலையுது பாவம்

டேய் திமுக கட்சில இருந்துட்டு என்ன கோவில்

அண்ணாச்சி, பராசக்தி வசனம் கேட்டிருக்கியரா

ஆமா

அதுல தலைவர் என்ன எழுதியிருக்கார்

பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடுன்னு நம்மள பத்தி எழுதியிருக்கார்

அண்ணாச்சி நல்லா கேளும் “கோவில் கூடாது என்பதற்காகக அல்ல, கோவில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிட கூடாது என்பதற்காக,பக்தி கூடாது என்பதற்காக அல்ல , பக்தி பகல்வேஷம் ஆகிவிட கூடாது என்பதற்காக”ன்னு தலைவர் எழுதியிருக்கார்

டேய் முடியலடா..

கேளும் அண்ணாச்சி, கோவிலுக்கு யாரும் போகலாம் திமுக தடுக்காது, துர்கா அண்ணியார் கோவிலுக்கு போய் எங்க எல்லாருக்காவும் வேண்டும், நாங்களும் அண்ணியாருக்காக வேண்டுவோம்

நல்லா வேண்டிக்கடா, ஆனால் ஒரு பத்திரிகை ஆதாரம் இல்லாம எழுதுமா?

அண்ணாச்சி நீரும் இருக்கியரு, நான் சொல்லி இவன் சொல்லி கேப்பியரா? மாட்டியரு. ஆனா பொண்டாட்டி ஒருவார்த்தை சொல்லிட்டா போனை ஆப் பண்ணிட்டு உடனே தூங்கிதியரு எப்படி?. சில விஷயம் எடுத்து சொல்ற பக்குவம் பொண்டாட்டிக்குதான் தெரியும் அண்ணாச்சி

அதனால‌

கட்சிக்காரங்க சில விஷயங்கள தலைவர்கிட்ட சொல்லமுடியாம அண்ணியார்கிட்ட சொல்வாங்க, அண்ணி பக்குவமா நேரம் பார்த்து எடுத்து சொல்வாங்க‌

அப்படியா

உமக்கு குஷ்பு வச்சி சொன்னாதான் புரியும், இந்த நாட்டாமை படத்துல அண்ணியாரா குஷ்பு வரும்ல, அப்படி பொறுப்பான அண்ணி எங்க துர்கா அண்ணி போதுமா?

போதும்டா, ஆனாலும் பத்திரிகை?

அட அவனுக ஆயிரம் சொல்வான், பழனிச்சாமி கூட கரும்பு இரும்பு மனிதர்னு என்னவெல்லாமோ சொல்லுவான் நம்ப சொல்றீங்களா?

இல்ல மாட்டேன்

அவனுக புலிகள, பிரபாகரன பற்றி எழுதினதெல்லாம் பொய்யின்னு நீரே சொல்லியிருக்கியரு

ஆமா கண்டிப்பா..

அப்படித்தான் அவனவன் பொறாமையில ஆயிரம் எழுதுவான் அதெல்லாம் நாங்க கண்டுக்கமாட்டோம். ஏதோ குடுபத்தையும் பார்த்துட்டு புருஷணுக்கு அனுசரணையா கட்சியிலையும் ஏதோ அண்ணியார் பண்ணிட்டிருக்கு , அது அப்படி இல்லண்ணாதான் திட்டனும், அது சரியா இருக்கு

அப்படியா?

பின்ன என்ன அண்ணாச்சி? அது என்ன வெளிநாட்டு டூர் போகுதா, இல்ல கிளப் அது இதுண்ணு அலையுதா, இல்ல பேட்டி அறிக்கைன்னு இம்சை பண்ணுதா?

அப்படில்லாம் இல்லடா

தெரியுதுல்ல, ஒரு நல்ல குடும்பத்துல மூத்த மருமக எவ்வளவு பொறுப்பா இருக்கணுமோ அப்படி இருக்காங்க எங்க அண்ணி, அத நினைச்சி பெருமைபடணும், கண்டவன் பேசுறதெல்லாம் கணக்குல எடுக்க கூடாது, அவங்க கஸ்தூரிபாய் கமலா நேரு.. இந்த சயின்டிஸ்ட் ஒருத்தி உண்டே நோபல் எல்லாம் வாங்கிச்சே தியரி

தியரி இல்லடா மேரி குயூரி

ஆங்.. அந்தம்மாதான் அப்படி கணவன் வழியில நிற்கிற மனைவி அண்ணாச்சி, தமிழ் கலாச்சாரம் அதுதான்

டேய் நீ எல்லாம் இங்க இருக்கவேண்டிய ஆளே இல்லடா, அறிவாலயம் பக்கம் போயிருடா

அட கட்சிக்கு எங்க இருந்தும் உழைக்கலாம் அண்ணாச்சி, அறிவாலயம் போகணும் அதுக்கு முன்னாடி உங்கள மாதிரி சில சங்கிகள ஏதாவது பண்ணிட்டுத்தான் போகணும், இனி துர்கா அண்ணி பற்றி பேசுவியரு?

நான் ஏண்டா அவங்கள பற்றி பேசணும், நீனே பேசிக்க.. உண்மைய சொல்லுடா Devi Somasundaram இன்பாக்ஸ்ல போய் பேசித்தானே இவ்வளவு பாயின்ட்டா பேசுற, அவதான சொல்லி தந்தா?

அது யாரு அண்ணாச்சி, அந்தம்மா திமுகவா?

உண்மையிலே அவள தெரியாதா?

தெரியாது அண்ணாச்சி

தெரியாமலே போகட்டும், அவகிட்ட மட்டும் பேசிட்டா அவ்வளவுதான், என் கழுத்த பிடிச்சி கோலாலம்பூருக்கு அடுத்தால மலை உச்சிக்கு கொண்டுபோய் தள்ளிவிட்டுட்டு வந்துருவ, நீ அவாகிட்ட‌ பேசாமலே இருடா..