அற்புத பாடகி ஸ்வர்ன லதாவிற்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

மிக மிக திறமையானவர்கள், ரசிகர்களை கட்டி போட்ட கலைஞர்களில் பெரும்பான்மையானோர் நெடுநாள் இருப்பதில்லை

திறமையினையும் ரசிக கூட்டத்தையும் அபூர்வ வரங்களையும் கொடுத்த இறைவன் சிலருக்கு ஆயுளை கொடுப்பதில்லை

மிக சிறு வயதிலே பாடவந்து 37 வயதிலே மரித்தும் போன சொர்னலாதாவும் அதில் ஒருவர்

மிக சிறந்த பாடகி, அதனைவிட சிறந்தது அந்த வீணை போன்ற குரல்

எல்லா இசையமைப்பாளரும் அவருக்காக காத்திருந்தார்கள், அவரும் தேசியவிருது வரை வாங்கி நம்பிக்கையினை தற்காத்தார்

அவர் இருந்திருந்தால் இன்று ஸ்ரேயா கோஷல் போன்றோர் இப்பக்கம் வந்திருக்கவே முடியாது

அந்த குரல் எவ்வளவு நாள்தான் மானிட உலகிலே பாடுவது? வானுலகிலும் பாடினால் என்ன? என விரும்பிய கடவுள் அழைத்துவிட்டான்

ஆயினும் அந்த குரலும் அவர் விட்டு சென்ற பாடல்களும் பூலோகத்தை விட்டு நீங்குவதே இல்லை

மனதை உருக்கிய அந்த குரலுக்கு சொந்தகாரரான அற்புத பாடகி ஸ்வர்ன லதாவிற்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

ஆண்டுகள் ஓடினாலும் அக்குரல் காற்றில் ஒலித்துகொண்டே இருக்கும்

ஆம் அது மனதோடு பேசிய குரல்..