அழகு தமிழுக்கான மாதமும் கூட
மார்கழியில் திருப்பாவையும் திருவெம்பாவையும் அவ்வளவு அழகு தமிழில் தித்திக்க தித்திக்க காதோரம் ஒலிக்கின்றது
தமிழின் மொத்த அழகும் அந்த இரண்டு காவியத்திலும் கொட்டி கிடக்கின்றது, பாரதி சொன்ன “யாமறிந்த மொழிகளிலே” என்ற வரியின் அர்த்தம் விளங்குகின்றது
இன்னும் திவ்விய பிரபந்தம், ஆழ்வார் அடியார் பாடல்கள் என ஏராளம், திருவாசகம் என்றுமே மனதை உருக்கிவைக்கும் ரசவாதம்
இந்துமதத்தையும் அதன் கடவுளை பற்றிய பாடல்களையும் நீக்கிவிட்டால் பண்டைய தமிழ் இலக்கிய உலகில் எதுவுமே இல்லை
இந்து கடவுள் செய்யுளை நீக்கினால் தமிழ் பண்டை இலக்கியம் சிலையும், கோபுரமும் இல்லா ஆலயம் போலத்தான் இருகின்றது
தமிழன் எவ்வளவு இந்து பக்தியில் தோய்ந்திருந்தால் இவ்வளவு அழகு செய்யுள் வந்திருக்கும், இவ்வளவு பெரும் ஆலயமும் அதன் சிலைகளும் வந்திருக்கும்?
தமிழின் அழகு தெரிய , சுவை புரிய இந்துவாய் இருத்தல் அவசியம்,
ஒரு இந்துவின் மனநிலையில் இருந்து பண்டைய பாடல்களை படியுங்கள், தமிழனாய் பிறந்த அந்த பிறவி பலனை மனம் உணரும்
தமிழும் இந்துமதமும் பிரிக்கமுடியாதவை, ஒன்று இன்றி இன்னொன்று இல்லை
ஆண்டாள் தமிழுக்கு கொடுத்த கொடை கொஞ்சமல்ல, அவளை சீண்டிய வைரமுத்து சின்மயியிடம் அடிபட்டு ஒடுங்கி இருப்பது கடவுளின் தீர்ப்பே.
தமிழனுக்கு மதமில்லை என்பது ஈரோட்டு ராம்சாமி அறிவாளி என்பதை போல பெரும் பொய், அண்ணாதுரை பேரரிஞன் என்பதை போன்ற மிக பெரும் பொய்
தமிழகம் கண்ட பன்னெடுங்கால வரலாற்றிலே பொய் வலம் வந்த காலம் இந்த திராவிட கோஷ்டிகள் வலம் வந்த இந்த 75 ஆண்டுகளே, இத்தோடு அவை ஒழிந்தும் போயின
மார்கழி புனிதமான கடவுளுக்கான மாதம் மட்டுமல்ல , அழகு தமிழுக்கான மாதமும் கூட
