அழியா காவியம் எதையும் நாத்திகம் படைக்காது
நாத்திகன் படைப்பு கொஞ்ச நாளில் அழியும், அழியா காவியம் எதையும் நாத்திகம் படைக்காதுஒருவன் எவ்வளவு திறமையுள்ளவனாயினும் கடவுளை மறுத்து தன் சொந்த பலத்தில் எது படைப்பான் என்றாலும் அதன் ஆயுள் குறைவே, காலம் அதை குப்பை என ஒதுக்கி தள்ளிவிடும்கம்யூனிச கடவுள் மறுப்பு அப்படித்தான் ஆனது, கடவுள் இல்லை என சொன்ன தேசங்களும் இல்லை ஆட்சியாளரும் இல்லை, தத்துவங்களும் இல்லைஆனால் தெய்வத்தின் அனுகிரகத்தில் உருவான எல்லாமும் தஞ்சை கோவில் போல காலம் கடந்தும் நிற்கின்றனகலையும் அப்படியே, ஆன்மீகத்தில் உருகிய எந்த கலைஞனின் படைப்பும் சாகா வரம் பெற்றவை.இளையராஜா ஆன்மீகத்தில் உருகிய கலைஞன், அப்பழுக்கற்ற ஆன்மீகவாதிஇந்த கார்த்திகை தீப நாளில் கண்களை மூடி அவரின் “மலைகோவில் வாசலில்…” பாடலை கேளுங்கள்அது காதல் பாடல் அல்ல , ஆண்டாளும் மீராவும் பாடிய உன்னத பக்தியின் சாயல் கொண்ட பாடல் ,ஆழ கவனித்தால் புரியும், மிக மிக சுகமான பக்தி இலக்கிய சாயல் கீதம் அது.இளையராஜா எந்த அளவு ஆன்மீகத்தில் உருகியிருந்தால் அப்படி ஒரு பாடலை கொடுத்திருக்க முடியும்.?திருவண்ணாமலை ஆலயத்தினை நிரம்ப நேசித்து வழிபட்ட இளையராஜா , மனதால் கரைந்து அந்த ஞானபூமிக்காகவே உருவாக்கிய ராகம் அது, அவர் ஆத்மாவின் ராகம் அது
அதனால் அது நிலைத்தது, அப்பாடலுக்கு அழிவே இல்லைஅந்த பாடலை தன் படத்தில் அனுமதித்த ரஜினி எப்படிபட்ட உன்னத ஆன்மீகவாதியாக இருக்கமுடியும்?ஆன்மீகவாதி கொடுக்கும் படைப்பு எக்காலமும் நிலைக்கும் என்பதற்கு இப்பாடல் என்றுமே சான்று