அழுகையும் சிரிப்புமாக தேடுகின்றது மனம்..
மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது, அப்பா இருந்திருந்தால் இப்படித்தான் கேட்பார்
“செலவு நிறைய இருக்கு 1 லட்சம் அனுப்பி வை
அவ்வளவு எல்லாம் இல்ல
இத சொல்றதுக்கு ஏன் அங்க போய் இருக்கணும், வீட்டுக்குள்ளே இருந்து சொல்லலாம்ல..
இப்போ இல்லப்பா
லேய் உன்ன பெத்ததுக்கு….., இப்போ உனக்கு 2 வயசா இருந்தாலும் போர்ல தூக்கிபோட்டா 50 லட்சம் கிடைச்சிருக்கும்…. உன்ன வளர்த்துமட்டும் என்ன ஆயிட்டு..”
மழை பெய்யும் பொழுதெல்லாம் அவரை அழுகையும் சிரிப்புமாக தேடுகின்றது மனம்..