அழுத பிள்ளைக்குத்தான் பிஸ்கட் கிடைக்கும்

இந்த நிலையிலும் தனக்கு மந்திரி பதவி இல்லை என்றால் ஒருகாலமும் இல்லை என மனம் வெறுத்த சுப்பிரமணியன் சாமி கடுமையாக ஆட ஆரம்பித்துவிட்டார்

அன்னார் மேல் ஏகபட்ட சர்ச்சை பின்னணி இருப்பதால் பாஜக தயங்குகின்றது, ஆனால் விடுவாரா சாமி?

முன்பெல்லாம் ஆட்சியில் இருக்கும் கட்சிதான் அன்னாருக்கு பிடிக்காது, இப்பொழுதெல்லாம் ஆட்சியில் இருக்கும் மந்திரிகள் அவருக்கு பிடிப்பதில்லை

அழுத பிள்ளைக்குத்தான் பிஸ்கட் கிடைக்கும் என்பதில் மகா உறுதியாய் இருக்கின்றார் சாமி, ஆனால் வீம்புக்கு அழும் பிள்ளைக்கு முதுகில் நாலு சாத்து கிடைக்கும் என்பதில் பாஜக மிக கவனமாக இருக்கின்றது